சூரா அல்அராக் - தமிழ் அனுவாதம், லிப்யந்தரன், தஃப்சீர் - இருந்து [140-150] வரை

Read More
Read Less
 

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

 

وَإِذۡ أَنجَيۡنَٰكُم مِّنۡ ءَالِ فِرۡعَوۡنَ يَسُومُونَكُمۡ سُوٓءَ ٱلۡعَذَابِ يُقَتِّلُونَ أَبۡنَآءَكُمۡ وَيَسۡتَحۡيُونَ نِسَآءَكُمۡۚ وَفِي ذَٰلِكُم بَلَآءٞ مِّن رَّبِّكُمۡ عَظِيمٞ

(இஸ்ரவேலர்களே!) கொடிய தண்டனையால் உங்க(ள் மூதாதைக)ளைத் துன்புறுத்திய ஃபிர்அவ்னுடைய குடும்பத்தாரிடமிருந்து உங்க(ள் மூதாதைக)ளைக் காப்பாற்றிய சமயத்தை நினைவு கூருங்கள். அவர்கள் உங்கள் மகன்களைக் கொன்று குவிப்பார்கள். இன்னும், உங்கள் பெண்(பிள்ளை)களை வாழவிடுவார்கள். இன்னும், இதில் உங்கள் இறைவனிடமிருந்து பெரிய சோதனை இருந்தது.

۞وَوَٰعَدۡنَا مُوسَىٰ ثَلَٰثِينَ لَيۡلَةٗ وَأَتۡمَمۡنَٰهَا بِعَشۡرٖ فَتَمَّ مِيقَٰتُ رَبِّهِۦٓ أَرۡبَعِينَ لَيۡلَةٗۚ وَقَالَ مُوسَىٰ لِأَخِيهِ هَٰرُونَ ٱخۡلُفۡنِي فِي قَوۡمِي وَأَصۡلِحۡ وَلَا تَتَّبِعۡ سَبِيلَ ٱلۡمُفۡسِدِينَ

இன்னும், மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்தோம். இன்னும், அதை பத்து இரவுகளைக் கொண்டு (நாற்பது இரவுகளாக) முழுமைப்படுத்தினோம். ஆகவே, அவருடைய இறைவனின் குறிப்பிட்ட காலம் நாற்பது இரவுகளாக முழுமையடைந்தது. ஹாரூனாகிய தன் சகோதரருக்கு மூஸா கூறினார்: “நீர் என் சமுதாயத்தில் எனக்கு பிரதிநிதியாக இரு! இன்னும், (அவர்களை) சீர்திருத்து! இன்னும், விஷமிகளுடைய பாதையை பின்பற்றாதே!”

وَلَمَّا جَآءَ مُوسَىٰ لِمِيقَٰتِنَا وَكَلَّمَهُۥ رَبُّهُۥ قَالَ رَبِّ أَرِنِيٓ أَنظُرۡ إِلَيۡكَۚ قَالَ لَن تَرَىٰنِي وَلَٰكِنِ ٱنظُرۡ إِلَى ٱلۡجَبَلِ فَإِنِ ٱسۡتَقَرَّ مَكَانَهُۥ فَسَوۡفَ تَرَىٰنِيۚ فَلَمَّا تَجَلَّىٰ رَبُّهُۥ لِلۡجَبَلِ جَعَلَهُۥ دَكّٗا وَخَرَّ مُوسَىٰ صَعِقٗاۚ فَلَمَّآ أَفَاقَ قَالَ سُبۡحَٰنَكَ تُبۡتُ إِلَيۡكَ وَأَنَا۠ أَوَّلُ ٱلۡمُؤۡمِنِينَ

இன்னும், நமது (குறித்த இடத்தில்) குறித்த நேரத்திற்கு மூஸா வந்து, அவருடைய இறைவன் அவருடன் பேசியபோது, “என் இறைவா! நீ (உன்னை) எனக்கு காண்பி, உன்னை பார்ப்பேன்” என்று கூறினார். “என்னை நீர் (இவ்வுலகத்தில்) அறவே பார்க்க மாட்டீர். எனினும், மலையைப் பார்ப்பீராக. (எனது ஒளியை அதன் மீது நான் வெளிப்படுத்தும்போது) அது தன் இடத்தில் நிலைத்திருந்தால் நீர் என்னைப் பார்ப்பீர்” என்று (இறைவன்) கூறினான். ஆக, அவருடைய இறைவன் (உடைய ஒளி) அம்மலை மீது வெளிப்பட்டபோது அதை அவன் துகள்களாக்கினான். இன்னும், மூஸா மூர்ச்சையானவராக விழுந்தார். ஆக, அவர் தெளிவு பெற்றபோது, “நீ மிகப் பரிசுத்தமானவன். நான் (உன்னைப் பார்க்கக் கோரிய குற்றத்திலிருந்து விலகி, உன்னிடம் மன்னிப்புக் கோரி) திருந்தி உன் பக்கம் திரும்புகிறேன். உன்னை நம்பிக்கை கொள்பவர்களில் நான் முதலாமவன்” என்று கூறினார்.

قَالَ يَٰمُوسَىٰٓ إِنِّي ٱصۡطَفَيۡتُكَ عَلَى ٱلنَّاسِ بِرِسَٰلَٰتِي وَبِكَلَٰمِي فَخُذۡ مَآ ءَاتَيۡتُكَ وَكُن مِّنَ ٱلشَّـٰكِرِينَ

(இறைவன்) கூறினான்: “மூஸாவே! என் தூதுசெய்திகளுக்கும், நான் பேசுவதற்கும் மக்களைவிட நிச்சயமாக நான் உம்மைத் தேர்ந்தெடுத்தேன். ஆகவே, நான் உமக்கு கொடுத்ததைப் பற்றிப்பிடிப்பீராக. இன்னும், நன்றி செலுத்துவோரில் ஆகிவிடுவீராக!”

وَكَتَبۡنَا لَهُۥ فِي ٱلۡأَلۡوَاحِ مِن كُلِّ شَيۡءٖ مَّوۡعِظَةٗ وَتَفۡصِيلٗا لِّكُلِّ شَيۡءٖ فَخُذۡهَا بِقُوَّةٖ وَأۡمُرۡ قَوۡمَكَ يَأۡخُذُواْ بِأَحۡسَنِهَاۚ سَأُوْرِيكُمۡ دَارَ ٱلۡفَٰسِقِينَ

இன்னும், (படைக்கப்பட்ட) ஒவ்வொரு பொருளிலிருந்து (அறிய வேண்டிய படிப்பினையையும்) அறிவுரையையும் (அல்லாஹ்வின் ஏவல், விலக்கல் தொடர்பான) ஒவ்வொன்றின் விளக்கத்தையும் அவருக்கு பலகைகளில் எழுதினோம். ஆகவே, “நீர் இவற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்து, உம் சமுதாயத்தை ஏவுவீராக. அவற்றில் மிக அழகியவற்றை அவர்கள் பற்றிப் பிடிக்கட்டும். பாவிகளின் இல்ல(மாகிய நரக)த்தை உங்க(ளில் யார் எனக்கு மாறு செய்கிறார்களோ அவர்)ளுக்குக் விரைவில் காண்பிப்பேன்.”

سَأَصۡرِفُ عَنۡ ءَايَٰتِيَ ٱلَّذِينَ يَتَكَبَّرُونَ فِي ٱلۡأَرۡضِ بِغَيۡرِ ٱلۡحَقِّ وَإِن يَرَوۡاْ كُلَّ ءَايَةٖ لَّا يُؤۡمِنُواْ بِهَا وَإِن يَرَوۡاْ سَبِيلَ ٱلرُّشۡدِ لَا يَتَّخِذُوهُ سَبِيلٗا وَإِن يَرَوۡاْ سَبِيلَ ٱلۡغَيِّ يَتَّخِذُوهُ سَبِيلٗاۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَكَانُواْ عَنۡهَا غَٰفِلِينَ

நியாயமின்றி பூமியில் பெருமையடிப்பவர்களை என் அத்தாட்சி(களை விட்டும் என் வசனங்)களை விட்டும் திருப்புவேன். அவர்கள் எல்லா அத்தாட்சிகளைப் பார்த்தாலும் அவற்றை நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். இன்னும், நேர்வழி, நல்லறிவுடைய பாதையை அவர்கள் பார்த்தால் அதை (தாங்கள் செல்லும்) பாதையாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இன்னும், வழிகேடு, மௌட்டீகத்துடைய பாதையை அவர்கள் பார்த்தால் அதை (தாங்கள் செல்லும்) பாதையாக எடுத்துக் கொள்வார்கள். அதற்கு காரணம், நிச்சயமாக அவர்கள் நம் வசனங்களைப் பொய்ப்பித்தனர்; இன்னும், அவற்றை விட்டு கவனமற்றவர்களாக (அலட்சியமாக) இருந்தார்கள் என்பதாகும்.

وَٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَلِقَآءِ ٱلۡأٓخِرَةِ حَبِطَتۡ أَعۡمَٰلُهُمۡۚ هَلۡ يُجۡزَوۡنَ إِلَّا مَا كَانُواْ يَعۡمَلُونَ

இன்னும், எவர்கள் நம் வசனங்களையும், மறுமையின் சந்திப்பையும் பொய்ப்பித்தார்களோ அவர்களுடைய (நற்)செயல்கள் பாழாகின. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கே தவிர (அவர்கள்) கூலி கொடுக்கப்படுவார்களா?

وَٱتَّخَذَ قَوۡمُ مُوسَىٰ مِنۢ بَعۡدِهِۦ مِنۡ حُلِيِّهِمۡ عِجۡلٗا جَسَدٗا لَّهُۥ خُوَارٌۚ أَلَمۡ يَرَوۡاْ أَنَّهُۥ لَا يُكَلِّمُهُمۡ وَلَا يَهۡدِيهِمۡ سَبِيلًاۘ ٱتَّخَذُوهُ وَكَانُواْ ظَٰلِمِينَ

இன்னும், மூஸாவுடைய சமுதாயம் அவருக்குப் பின்னர் தங்கள் நகையிலிருந்து ஒரு காளைக் கன்றை - மாட்டின் சப்தம் அதற்கு இருந்த ஓர் உடலை - (வணங்கப்படும் தெய்வமாக) எடுத்துக் கொண்டனர். “நிச்சயமாக அது அவர்களுடன் பேசுவதுமில்லை; இன்னும், அவர்களுக்கு (நேரான) பாதையை அது வழிகாட்டுவதுமில்லை என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர்கள் அதை (வணங்கப்படும் தெய்வமாக) உறுதியாக எடுத்துக் கொண்டார்கள். இன்னும் அவர்கள் அநியாயக்காரர்களாக ஆகிவிட்டனர்.

وَلَمَّا سُقِطَ فِيٓ أَيۡدِيهِمۡ وَرَأَوۡاْ أَنَّهُمۡ قَدۡ ضَلُّواْ قَالُواْ لَئِن لَّمۡ يَرۡحَمۡنَا رَبُّنَا وَيَغۡفِرۡ لَنَا لَنَكُونَنَّ مِنَ ٱلۡخَٰسِرِينَ

இன்னும், அவர்கள் கைசேதப்பட்டு, அவர்கள் வழிதவறிவிட்டனர் என்பதை அவர்கள் அறிந்தபோது, “எங்கள் இறைவன் எங்களுக்கு கருணை புரியவில்லையென்றால், எங்களை மன்னிக்கவில்லையென்றால் நிச்சயம் நாங்கள் நஷ்டவாளிகளில் ஆகிவிடுவோம்” என்று கூறினார்கள்.

وَلَمَّا رَجَعَ مُوسَىٰٓ إِلَىٰ قَوۡمِهِۦ غَضۡبَٰنَ أَسِفٗا قَالَ بِئۡسَمَا خَلَفۡتُمُونِي مِنۢ بَعۡدِيٓۖ أَعَجِلۡتُمۡ أَمۡرَ رَبِّكُمۡۖ وَأَلۡقَى ٱلۡأَلۡوَاحَ وَأَخَذَ بِرَأۡسِ أَخِيهِ يَجُرُّهُۥٓ إِلَيۡهِۚ قَالَ ٱبۡنَ أُمَّ إِنَّ ٱلۡقَوۡمَ ٱسۡتَضۡعَفُونِي وَكَادُواْ يَقۡتُلُونَنِي فَلَا تُشۡمِتۡ بِيَ ٱلۡأَعۡدَآءَ وَلَا تَجۡعَلۡنِي مَعَ ٱلۡقَوۡمِ ٱلظَّـٰلِمِينَ

இன்னும், மூஸா கோபித்தவராக, ஆவேசப்பட்டவராக (வருத்தப்பட்டவராக) தன் சமுதாயத்திடம் திரும்பியபோது, “எனக்குப் பின்னர் (என் சமுதாயத்திலும் என் மார்க்கத்திலும்) நான் சென்றதற்குப் பிறகு நீங்கள் செய்தது மிகக் கெட்டதாகும். உங்கள் இறைவனின் கட்டளையை (மீறுவதில்) அவசரப்பட்டீர்களா?” என்று கூறினார். இன்னும், அந்த பலகைகளை எறிந்தார். இன்னும், தன் சகோதரர் (ஹாரூன்) உடைய தலை (முடி)யைப் பிடித்து, அவரைத் தன் பக்கம் இழுத்தார். அப்போது, (ஹாரூன்) கூறினார்: “என் தாயின் மகனே! நிச்சயமாக (நமது) சமுதாயம் என்னை பலவீனப்படுத்திவிட்டனர். இன்னும், அவர்கள் என்னைக் கொன்றுவிடவும் முற்பட்டனர். ஆகவே, என் மூலம் எதிரிகளை நகைக்கச் செய்யாதீர். இன்னும், அநியாயக்கார மக்களுடன் என்னை சேர்த்துவிடாதீர்.”

Surah tamil Translation and Transliteration

In Surah you can read the translation of Ahmad Raza Khan who was a renowned scholar of the Islamic world and his translation book is known as Kanzul Imaan. You can read the transliteration of Surah which will help you to understand how to read the Arabic text. Apart from that, we have included a Word-By-Word tamil Translation of the Arabic text of Surah .

Surah tamil Tafsir/Tafseer (Commentry)

In Surah we have included two Tafseer (Commentary) in tamil. The first one is from Mufti Ahmad Yaar Khan who was a well-known scholar. In this tafsir, we have also included the most popular Tafsir Ibn-Kathir which is the most comprehensive tafsir available in the world. You can read both or any one of your choice.

Sign up for Newsletter

×

📱 Download Our Quran App

For a faster and smoother experience,
install our mobile app now.

Download Now