சூரா அல்-இஸ்ரா - தமிழ் அனுவாதம், லிப்யந்தரன், தஃப்சீர் - இருந்து [30-40] வரை

Read More
Read Less
 

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

 

وَلَا تَقۡتُلُوٓاْ أَوۡلَٰدَكُمۡ خَشۡيَةَ إِمۡلَٰقٖۖ نَّحۡنُ نَرۡزُقُهُمۡ وَإِيَّاكُمۡۚ إِنَّ قَتۡلَهُمۡ كَانَ خِطۡـٔٗا كَبِيرٗا

(மனிதர்களே!) வறுமையைப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். நாம்தான் அவர்களுக்கும் உங்களுக்கும் உணவளிக்கிறோம். நிச்சயமாக அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாக இருக்கிறது.

وَلَا تَقۡرَبُواْ ٱلزِّنَىٰٓۖ إِنَّهُۥ كَانَ فَٰحِشَةٗ وَسَآءَ سَبِيلٗا

(மனிதர்களே!) விபச்சாரத்தை நெருங்காதீர்கள்! நிச்சயமாக அது மானக்கேடானதாக இருக்கிறது. இன்னும், அது கெட்ட வழியாக இருக்கிறது.

وَلَا تَقۡتُلُواْ ٱلنَّفۡسَ ٱلَّتِي حَرَّمَ ٱللَّهُ إِلَّا بِٱلۡحَقِّۗ وَمَن قُتِلَ مَظۡلُومٗا فَقَدۡ جَعَلۡنَا لِوَلِيِّهِۦ سُلۡطَٰنٗا فَلَا يُسۡرِف فِّي ٱلۡقَتۡلِۖ إِنَّهُۥ كَانَ مَنصُورٗا

மேலும், அல்லாஹ் புனிதமாக்கிய உயிரை உரிமையின்றி கொல்லாதீர்கள். இன்னும், எவர் அநீதி செய்யப்பட்டவராக கொல்லப்பட்டாரோ, (அவருக்காக பழிக்குப் பழி வாங்கும்) அதிகாரத்தை அவருடைய உறவினருக்கு நாம் ஆக்கினோம். ஆகவே, அவர் (-அந்த உறவினர் பழிக்குப்பழி) கொல்வதில் அளவு கடக்க வேண்டாம். நிச்சயமாக அவர் (-கொல்லப்பட்டவரின் உறவினர்) உதவி செய்யப்பட்டவராக இருக்கிறார்.*

وَلَا تَقۡرَبُواْ مَالَ ٱلۡيَتِيمِ إِلَّا بِٱلَّتِي هِيَ أَحۡسَنُ حَتَّىٰ يَبۡلُغَ أَشُدَّهُۥۚ وَأَوۡفُواْ بِٱلۡعَهۡدِۖ إِنَّ ٱلۡعَهۡدَ كَانَ مَسۡـُٔولٗا

இன்னும், அனாதையின் செல்வத்தை அவர் தன் வாலிபத்தை அடையும் வரை மிக அழகிய முறையில் தவிர நெருங்காதீர்கள். மேலும், உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள். நிச்சயமாக உடன்படிக்கை (குறித்து மறுமையில்) விசாரிக்கப்படக் கூடியதாக இருக்கிறது.

وَأَوۡفُواْ ٱلۡكَيۡلَ إِذَا كِلۡتُمۡ وَزِنُواْ بِٱلۡقِسۡطَاسِ ٱلۡمُسۡتَقِيمِۚ ذَٰلِكَ خَيۡرٞ وَأَحۡسَنُ تَأۡوِيلٗا

இன்னும், நீங்கள் (பொருள்களை) அளந்(து கொடுத்)தால் (அந்த) அளவையை முழுமையாக்குங்கள்; இன்னும், சரியான (நீதமான) தராசைக் கொண்டு (பொருள்களை) நிறு(த்துக் கொடு)ங்கள். அது மிகச் சிறந்ததும் முடிவால் மிக அழகியதும் ஆகும்.

وَلَا تَقۡفُ مَا لَيۡسَ لَكَ بِهِۦ عِلۡمٌۚ إِنَّ ٱلسَّمۡعَ وَٱلۡبَصَرَ وَٱلۡفُؤَادَ كُلُّ أُوْلَـٰٓئِكَ كَانَ عَنۡهُ مَسۡـُٔولٗا

இன்னும், உனக்கு எதைப் பற்றி அறிவு இல்லையோ அதைப் பின் தொடராதே! (அதைச் செய்யாதே). நிச்சயமாக செவி, பார்வை, உள்ளம் ஆகிய இவை எல்லாம் அவற்றைப் பற்றி விசாரிக்கப்படுபவையாக இருக்கின்றன.

وَلَا تَمۡشِ فِي ٱلۡأَرۡضِ مَرَحًاۖ إِنَّكَ لَن تَخۡرِقَ ٱلۡأَرۡضَ وَلَن تَبۡلُغَ ٱلۡجِبَالَ طُولٗا

இன்னும், பூமியில் கர்வம் கொண்டவனாக நடக்காதே. நிச்சயமாக நீ பூமியை அறவே கிழிக்கவும் முடியாது. இன்னும், நீ மலைகளின் உயரத்தை அறவே அடையவும் முடியாது.

كُلُّ ذَٰلِكَ كَانَ سَيِّئُهُۥ عِندَ رَبِّكَ مَكۡرُوهٗا

இவையெல்லாம், இவற்றின் தீமை உமது இறைவனிடம் வெறுக்கப்பட்டதாக இருக்கிறது.

ذَٰلِكَ مِمَّآ أَوۡحَىٰٓ إِلَيۡكَ رَبُّكَ مِنَ ٱلۡحِكۡمَةِۗ وَلَا تَجۡعَلۡ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ فَتُلۡقَىٰ فِي جَهَنَّمَ مَلُومٗا مَّدۡحُورًا

(நபியே! நல்லுபதேசங்களில் மேற்கூறப்பட்ட) இவை, உமக்கு உம் இறைவன் வஹ்யி அறிவித்த ஞானத்திலிருந்து உள்ளவையாகும். (நபியே!) மேலும், அல்லாஹ்வுடன், வணங்கப்படும் வேறு ஒருவரை ஆக்காதீர். (அவ்வாறு நீர் செய்தால்) இகழப்பட்டவராக, (இறை அருளை விட்டு) தூரமாக்கப்பட்டவராக நரகில் எறியப்படுவீர்.

أَفَأَصۡفَىٰكُمۡ رَبُّكُم بِٱلۡبَنِينَ وَٱتَّخَذَ مِنَ ٱلۡمَلَـٰٓئِكَةِ إِنَٰثًاۚ إِنَّكُمۡ لَتَقُولُونَ قَوۡلًا عَظِيمٗا

ஆக, (மனிதர்களே!) உங்கள் இறைவன் உங்களுக்கு ஆண் பிள்ளைகளை சொந்தமாக்கிவிட்டு, (உங்கள் கற்பனை படி தமக்கு) வானவர்களை பெண் பிள்ளைகளாக ஆக்கிக் கொண்டானா? நிச்சயமாக நீங்கள் பெரிய (அபாண்டமான பொய்யான) கூற்றை கூறுகிறீர்கள்.

Surah tamil Translation and Transliteration

In Surah you can read the translation of Ahmad Raza Khan who was a renowned scholar of the Islamic world and his translation book is known as Kanzul Imaan. You can read the transliteration of Surah which will help you to understand how to read the Arabic text. Apart from that, we have included a Word-By-Word tamil Translation of the Arabic text of Surah .

Surah tamil Tafsir/Tafseer (Commentry)

In Surah we have included two Tafseer (Commentary) in tamil. The first one is from Mufti Ahmad Yaar Khan who was a well-known scholar. In this tafsir, we have also included the most popular Tafsir Ibn-Kathir which is the most comprehensive tafsir available in the world. You can read both or any one of your choice.

Sign up for Newsletter

×

📱 Download Our Quran App

For a faster and smoother experience,
install our mobile app now.

Download Now