சூரா அல்-இஸ்ரா - தமிழ் அனுவாதம், லிப்யந்தரன், தஃப்சீர் - இருந்து [40-50] வரை

Read More
Read Less
 

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

 

وَلَقَدۡ صَرَّفۡنَا فِي هَٰذَا ٱلۡقُرۡءَانِ لِيَذَّكَّرُواْ وَمَا يَزِيدُهُمۡ إِلَّا نُفُورٗا

மேலும், அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டவட்டமாக (பல நல்லுபதேசங்களையும் பல வகையான உதாரணங்களையும்) விவரித்தோம். ஆனால், அது அவர்களுக்கு வெறுப்பைத் தவிர அதிகப்படுத்தவில்லை.

قُل لَّوۡ كَانَ مَعَهُۥٓ ءَالِهَةٞ كَمَا يَقُولُونَ إِذٗا لَّٱبۡتَغَوۡاْ إِلَىٰ ذِي ٱلۡعَرۡشِ سَبِيلٗا

(நபியே!) கூறுவீராக! அவர்கள் கூறுவது போல் அவனுடன் (வேறு) பல கடவுள்கள் இருந்திருந்தால், அப்போது அர்ஷ்ஷுக்குரிய (உண்மையான இறை)வன் பக்கம் செல்வ(தற்கு; இன்னும், அவனை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றுவ)தற்கு ஒரு வழியைத் தேடியிருப்பார்கள்.

سُبۡحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يَقُولُونَ عُلُوّٗا كَبِيرٗا

அவன் மிகப் பரிசுத்தமானவன். இன்னும், இவர்கள் கூறுவதை விட்டு அவன் மிக மிக உயர்ந்தவன்.

تُسَبِّحُ لَهُ ٱلسَّمَٰوَٰتُ ٱلسَّبۡعُ وَٱلۡأَرۡضُ وَمَن فِيهِنَّۚ وَإِن مِّن شَيۡءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمۡدِهِۦ وَلَٰكِن لَّا تَفۡقَهُونَ تَسۡبِيحَهُمۡۚ إِنَّهُۥ كَانَ حَلِيمًا غَفُورٗا

ஏழு வானங்களும் பூமியும் அவற்றிலுள்ளவர்களும் அவனைத் துதிக்கிறார்கள். இன்னும், அவனைப் புகழ்ந்து துதித்தே தவிர எந்த ஒரு பொருளும் இல்லை. எனினும், (மனிதர்களே) அவர்களின் துதியை நீங்கள் அறிய மாட்டீர்கள். நிச்சயமாக அவன் மகா சகிப்பாளனாக, பெரும் மன்னிப்பாளனாக இருக்கிறான்.

وَإِذَا قَرَأۡتَ ٱلۡقُرۡءَانَ جَعَلۡنَا بَيۡنَكَ وَبَيۡنَ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ حِجَابٗا مَّسۡتُورٗا

(நபியே!) நீர் குர்ஆனை ஓதினால் உமக்கு இடையிலும் மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு இடையிலும் (குர்ஆனை புரிவதிலிருந்து அவர்களை) மறைக்கக் கூடிய ஒரு திரையை (அவர்களின் புறக்கணிப்பினால் அவர்களுக்கு தண்டனையாக) ஆக்கிவிடுவோம்.

وَجَعَلۡنَا عَلَىٰ قُلُوبِهِمۡ أَكِنَّةً أَن يَفۡقَهُوهُ وَفِيٓ ءَاذَانِهِمۡ وَقۡرٗاۚ وَإِذَا ذَكَرۡتَ رَبَّكَ فِي ٱلۡقُرۡءَانِ وَحۡدَهُۥ وَلَّوۡاْ عَلَىٰٓ أَدۡبَٰرِهِمۡ نُفُورٗا

இன்னும், அவர்களுடைய உள்ளங்கள் மீது அதை அவர்கள் விளங்குவதற்கு (தடையாக) மூடிகளையும் அவர்களுடைய காதுகளில் செவிட்டு தனத்தையும் ஆக்கிவிடுவோம். மேலும், (நபியே!) குர்ஆனில் உம் இறைவன் ஒருவனை மட்டும் (புகழ்ந்து துதித்து) நீர் நினைவு கூர்ந்தால், அவர்கள் (அதை) வெறுத்து தங்கள் பின்புறங்கள் மீது திரும்பி (ஓடி) விடுகிறார்கள்.

نَّحۡنُ أَعۡلَمُ بِمَا يَسۡتَمِعُونَ بِهِۦٓ إِذۡ يَسۡتَمِعُونَ إِلَيۡكَ وَإِذۡ هُمۡ نَجۡوَىٰٓ إِذۡ يَقُولُ ٱلظَّـٰلِمُونَ إِن تَتَّبِعُونَ إِلَّا رَجُلٗا مَّسۡحُورًا

அவர்கள் உம்மிடம் (இந்த குர்ஆனை) செவியுறும்போது எதற்காக அவர்கள் செவியுறுகிறார்கள் என்பதையும்; இன்னும், அவர்கள் தனித்து பேசும்போதும், “உண்ணவும் குடிக்கவும் செய்யும் (மனித இனத்தைச் சேர்ந்த) ஓர் ஆடவரைத் தவிர (உயர்வான ஒரு வானவரை) நீங்கள் பின்பற்றவில்லை” என்று அந்த அநியாயக்காரர்கள் கூறும் போதும் அவர்கள் கூறுவதை நாம் மிக அறிந்தவர்களாக இருக்கிறோம்.

ٱنظُرۡ كَيۡفَ ضَرَبُواْ لَكَ ٱلۡأَمۡثَالَ فَضَلُّواْ فَلَا يَسۡتَطِيعُونَ سَبِيلٗا

(நபியே!) உமக்கு எவ்வாறு (தவறான) தன்மைகளை அவர்கள் விவரிக்கிறார்கள் என்பதை கவனிப்பீராக! ஆக, அவர்கள் வழிகெட்டனர். இன்னும், அவர்கள் (நேர்வழியின் பக்கம் வருவதற்கு) எந்த ஒரு பாதைக்கும் சக்தி பெற மாட்டார்கள்.

وَقَالُوٓاْ أَءِذَا كُنَّا عِظَٰمٗا وَرُفَٰتًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ خَلۡقٗا جَدِيدٗا

“இன்னும், நாம் (இறந்து) எலும்புகளாகவும், (மண்ணோடு மண்ணாக) மக்கியவர்களாகவும் ஆகிவிட்டால் புதியதொரு படைப்பாக நிச்சயமாக நாம் எழுப்பப்படுவோமா?” என்று அவர்கள் கூறுகிறார்கள்.

۞قُلۡ كُونُواْ حِجَارَةً أَوۡ حَدِيدًا

(நபியே!) கூறுவீராக! நீங்கள் கல்லாகவோ; அல்லது, இரும்பாகவோ ஆகிவிடுங்கள். (ஆனால், அது உங்களால் முடியாது.)

Surah tamil Translation and Transliteration

In Surah you can read the translation of Ahmad Raza Khan who was a renowned scholar of the Islamic world and his translation book is known as Kanzul Imaan. You can read the transliteration of Surah which will help you to understand how to read the Arabic text. Apart from that, we have included a Word-By-Word tamil Translation of the Arabic text of Surah .

Surah tamil Tafsir/Tafseer (Commentry)

In Surah we have included two Tafseer (Commentary) in tamil. The first one is from Mufti Ahmad Yaar Khan who was a well-known scholar. In this tafsir, we have also included the most popular Tafsir Ibn-Kathir which is the most comprehensive tafsir available in the world. You can read both or any one of your choice.

Sign up for Newsletter

×

📱 Download Our Quran App

For a faster and smoother experience,
install our mobile app now.

Download Now