சூரா அல்-இஸ்ரா - தமிழ் அனுவாதம், லிப்யந்தரன், தஃப்சீர் - இருந்து [70-80] வரை

Read More
Read Less
 

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

 

يَوۡمَ نَدۡعُواْ كُلَّ أُنَاسِۭ بِإِمَٰمِهِمۡۖ فَمَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَأُوْلَـٰٓئِكَ يَقۡرَءُونَ كِتَٰبَهُمۡ وَلَا يُظۡلَمُونَ فَتِيلٗا

ஒவ்வொரு மனிதனையும் அவர்களின் தலைவர்களுடன் நாம் அழைக்கும் நாளில், எவர் தமது (அமல்கள் எழுதப்பட்ட) புத்தகத்தை தமது வலக்கையில் கொடுக்கப்படுவாரோ அ(த்தகைய)வர்கள் தமது புத்தகத்தை (மகிழ்ச்சியுடன்) வாசிப்பார்கள். மேலும், ஒரு நூல் அளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.

وَمَن كَانَ فِي هَٰذِهِۦٓ أَعۡمَىٰ فَهُوَ فِي ٱلۡأٓخِرَةِ أَعۡمَىٰ وَأَضَلُّ سَبِيلٗا

மேலும், எவர் இம்மையில் (நேர்வழி பெறாத) குருடராக இருந்தாரோ அவர் மறுமையிலும் (சொர்க்கப் பாதையில் செல்ல முடியாத) குருடராகவும் பாதையால் மிக வழிகெட்டவராகவும் இருப்பார்.

وَإِن كَادُواْ لَيَفۡتِنُونَكَ عَنِ ٱلَّذِيٓ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ لِتَفۡتَرِيَ عَلَيۡنَا غَيۡرَهُۥۖ وَإِذٗا لَّٱتَّخَذُوكَ خَلِيلٗا

நாம் உமக்கு வஹ்யி அறிவித்ததை விட்டு (வேறு ஒன்றின் பக்கம்) உம்மை அவர்கள் திருப்பிவிட நிச்சயமாக நெருங்கிவிட்டனர், ஏனெனில், நீர் (வஹ்யில் எது அறிவிக்கப்பட்டதோ) அது அல்லாததை (பொய்யாக) நம் மீது இட்டுக் கட்டுவதற்காக. (அப்படி நீ இட்டுக்கட்டி இருந்தால்) அப்போது அவர்கள் உம்மை உற்ற நண்பராக எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

وَلَوۡلَآ أَن ثَبَّتۡنَٰكَ لَقَدۡ كِدتَّ تَرۡكَنُ إِلَيۡهِمۡ شَيۡـٔٗا قَلِيلًا

மேலும், உம்மை நாம் உறுதிபடுத்தி இருக்காவிட்டால் கொஞ்சம் ஓர் அளவாவது அவர்கள் பக்கம் நீர் சாய்ந்துவிட நெருங்கி இருப்பீர்.

إِذٗا لَّأَذَقۡنَٰكَ ضِعۡفَ ٱلۡحَيَوٰةِ وَضِعۡفَ ٱلۡمَمَاتِ ثُمَّ لَا تَجِدُ لَكَ عَلَيۡنَا نَصِيرٗا

(அப்படி நீர் சாய்ந்திருந்தால்) அப்போது இவ்வாழ்கையில் இரு மடங்கு தண்டனையையும் மரணத்திற்குப் பின் இரு மடங்கு தண்டனையையும் நீர் சுவைக்கும்படி செய்திருப்போம். பிறகு, நமக்கு எதிராக உமக்கு உதவக் கூடியவரை காணமாட்டீர்.

وَإِن كَادُواْ لَيَسۡتَفِزُّونَكَ مِنَ ٱلۡأَرۡضِ لِيُخۡرِجُوكَ مِنۡهَاۖ وَإِذٗا لَّا يَلۡبَثُونَ خِلَٰفَكَ إِلَّا قَلِيلٗا

மேலும், நிச்சயமாக (நபியே! உமது) ஊரிலிருந்து அவர்கள் உம்மை வெளியேற்றுவதற்காக உம்மை அவர்கள் தூண்டி விட (உமக்கு தொந்தரவு தர) நெருங்கிவிட்டார்கள். (அப்படி அவர்கள் செய்திருந்தால்) அப்போது, அவர்கள் உமக்குப் பின்னால் சொற்ப காலமே தவிர வசித்திருக்க மாட்டார்கள்.

سُنَّةَ مَن قَدۡ أَرۡسَلۡنَا قَبۡلَكَ مِن رُّسُلِنَاۖ وَلَا تَجِدُ لِسُنَّتِنَا تَحۡوِيلًا

நம் தூதர்களில் உமக்கு முன்பு நாம் அனுப்பியவர்களின் நடைமுறை(ப்படியே இப்போதும் நடக்கும்). மேலும், நம் நடைமுறையில் மாற்றத்தை நீர் காணமாட்டீர்.

أَقِمِ ٱلصَّلَوٰةَ لِدُلُوكِ ٱلشَّمۡسِ إِلَىٰ غَسَقِ ٱلَّيۡلِ وَقُرۡءَانَ ٱلۡفَجۡرِۖ إِنَّ قُرۡءَانَ ٱلۡفَجۡرِ كَانَ مَشۡهُودٗا

(நபியே!) சூரியன் (வானத்தின் நடுவிலிருந்து) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் வரை உள்ள தொழுகைகளையும் ஃபஜ்ருடைய தொழுகையையும் நிலை நிறுத்துவீராக. நிச்சயமாக ஃபஜ்ர் உடைய தொழுகை வானவர்கள் கலந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

وَمِنَ ٱلَّيۡلِ فَتَهَجَّدۡ بِهِۦ نَافِلَةٗ لَّكَ عَسَىٰٓ أَن يَبۡعَثَكَ رَبُّكَ مَقَامٗا مَّحۡمُودٗا

இன்னும், இரவில் (கொஞ்சம்) உறங்கி எழுந்து அதை (-குர்ஆனை) ஓதி தொழுவீராக! இது உமக்கு (மட்டும்) உபரியா(ன கடமையா)கும். (மறுமையில்) மகாம் மஹ்மூது எனும் புகழப்பட்ட இடத்தில் உம்மை உம் இறைவன் எழுப்பக் கூடும்.

وَقُل رَّبِّ أَدۡخِلۡنِي مُدۡخَلَ صِدۡقٖ وَأَخۡرِجۡنِي مُخۡرَجَ صِدۡقٖ وَٱجۡعَل لِّي مِن لَّدُنكَ سُلۡطَٰنٗا نَّصِيرٗا

மேலும், (நபியே!) கூறுவீராக: “என் இறைவா! என்னை நல்ல நுழைவிடத்தில் (மதீனாவில்) நுழையவை. நல்ல வெளியேறுமிடத்தில் (மக்காவில்) இருந்து என்னை வெளியேற்று! உதவக்கூடிய ஓர் ஆதாரத்தை உன்னிடமிருந்து எனக்கு ஏற்படுத்து!”

Surah tamil Translation and Transliteration

In Surah you can read the translation of Ahmad Raza Khan who was a renowned scholar of the Islamic world and his translation book is known as Kanzul Imaan. You can read the transliteration of Surah which will help you to understand how to read the Arabic text. Apart from that, we have included a Word-By-Word tamil Translation of the Arabic text of Surah .

Surah tamil Tafsir/Tafseer (Commentry)

In Surah we have included two Tafseer (Commentary) in tamil. The first one is from Mufti Ahmad Yaar Khan who was a well-known scholar. In this tafsir, we have also included the most popular Tafsir Ibn-Kathir which is the most comprehensive tafsir available in the world. You can read both or any one of your choice.

Sign up for Newsletter

×

📱 Download Our Quran App

For a faster and smoother experience,
install our mobile app now.

Download Now