சூரா யூனுஸ் - தமிழ் அனுவாதம், லிப்யந்தரன், தஃப்சீர் - இருந்து [30-40] வரை

Read More
Read Less
 

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

 

قُلۡ مَن يَرۡزُقُكُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ أَمَّن يَمۡلِكُ ٱلسَّمۡعَ وَٱلۡأَبۡصَٰرَ وَمَن يُخۡرِجُ ٱلۡحَيَّ مِنَ ٱلۡمَيِّتِ وَيُخۡرِجُ ٱلۡمَيِّتَ مِنَ ٱلۡحَيِّ وَمَن يُدَبِّرُ ٱلۡأَمۡرَۚ فَسَيَقُولُونَ ٱللَّهُۚ فَقُلۡ أَفَلَا تَتَّقُونَ

(நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: “வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு யார் உணவளிக்கிறான்? அல்லது, (உங்கள்) செவிக்கும் பார்வைகளுக்கும் யார் உரிமை கொள்வான்? இன்னும், இறந்ததிலிருந்து உயிருள்ளதையும்; உயிருள்ளதிலிருந்து இறந்ததையும் யார் உற்பத்தி செய்கிறான்? இன்னும், எல்லா காரியங்களையும் யார் திட்டமிட்டு நிர்வகிக்கிறான்?” ஆக, (அதற்கு பதிலில்), “அல்லாஹ்தான்” என்று கூறுவார்கள். ஆக, நீர் கூறுவீராக: “ஆகவே, நீங்கள் அந்த அல்லாஹ்வை அஞ்சவேண்டாமா?”

فَذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمُ ٱلۡحَقُّۖ فَمَاذَا بَعۡدَ ٱلۡحَقِّ إِلَّا ٱلضَّلَٰلُۖ فَأَنَّىٰ تُصۡرَفُونَ

ஆக, “அந்த அல்லாஹ்தான் உங்கள் உண்மையான இறைவன். ஆக, (இந்தளவு தெளிவான) உண்மைக்குப் பின்னர் வழிகேட்டைத் தவிர (வேறு) என்ன இருக்கிறது? ஆகவே, நீங்கள் (உண்மையிலிருந்து) எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்?”.

كَذَٰلِكَ حَقَّتۡ كَلِمَتُ رَبِّكَ عَلَى ٱلَّذِينَ فَسَقُوٓاْ أَنَّهُمۡ لَا يُؤۡمِنُونَ

(அல்லாஹ்விற்கு கீழ்ப்படியாமல்) உண்மையை மீறியவர்கள் மீது, - நிச்சயமாக அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் - என்ற உம் இறைவனின் சொல் அவ்வாறே உறுதியாகி விட்டது.

قُلۡ هَلۡ مِن شُرَكَآئِكُم مَّن يَبۡدَؤُاْ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥۚ قُلِ ٱللَّهُ يَبۡدَؤُاْ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥۖ فَأَنَّىٰ تُؤۡفَكُونَ

(நபியே!) கூறுவீராக: “படைப்புகளை முதலாவதாக உருவாக்கி, (அவை இறந்த) பிறகு, அவற்றை மீண்டும் உருவாக்குபவன் (யாரும்) உங்கள் தெய்வங்களில் உண்டா?” (நபியே!) கூறுவீராக: “அல்லாஹ்தான் படைப்புகளை முதலாவதாக உருவாக்குகிறான். பிறகு, (அவை இறந்த பின்னர்) அவற்றை மீண்டும் (மறுமையில்) உருவாக்குவான்.” ஆக, (இத்தகைய இறைவனை வணங்குவதிலிருந்து சிலைகளை வணங்குவதன் பக்கம்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்?

قُلۡ هَلۡ مِن شُرَكَآئِكُم مَّن يَهۡدِيٓ إِلَى ٱلۡحَقِّۚ قُلِ ٱللَّهُ يَهۡدِي لِلۡحَقِّۗ أَفَمَن يَهۡدِيٓ إِلَى ٱلۡحَقِّ أَحَقُّ أَن يُتَّبَعَ أَمَّن لَّا يَهِدِّيٓ إِلَّآ أَن يُهۡدَىٰۖ فَمَا لَكُمۡ كَيۡفَ تَحۡكُمُونَ

(நபியே) கூறுவீராக: “சத்தியத்தின் பக்கம் நேர்வழி காட்டுபவர் (யாரும்) உங்கள் தெய்வங்களில் உண்டா?” (நபியே) கூறுவீராக: “அல்லாஹ்தான் சத்தியத்திற்கு நேர்வழி காட்டுகிறான். ஆக, சத்தியத்தின் பக்கம் நேர்வழி காட்டுபவன் பின்பற்றப்படுவதற்கு மிகத் தகுதியானவனா? அல்லது, தான் நேர்வழி காட்டப்பட்டால் தவிர நேர்வழி அடையாதவ(ன் பின்பற்ற தகுதியானவ)னா? ஆக, உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்”

وَمَا يَتَّبِعُ أَكۡثَرُهُمۡ إِلَّا ظَنًّاۚ إِنَّ ٱلظَّنَّ لَا يُغۡنِي مِنَ ٱلۡحَقِّ شَيۡـًٔاۚ إِنَّ ٱللَّهَ عَلِيمُۢ بِمَا يَفۡعَلُونَ

இன்னும், அவர்களில் பெரும்பாலானவர்கள் சந்தேகத்தையே தவிர (வேறு எதையும்) பின்பற்றுவதில்லை. நிச்சயமாக சந்தேகம் உண்மையை விட்டும் ஒரு சிறிதும் பலன்தராது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிந்தவன்.

وَمَا كَانَ هَٰذَا ٱلۡقُرۡءَانُ أَن يُفۡتَرَىٰ مِن دُونِ ٱللَّهِ وَلَٰكِن تَصۡدِيقَ ٱلَّذِي بَيۡنَ يَدَيۡهِ وَتَفۡصِيلَ ٱلۡكِتَٰبِ لَا رَيۡبَ فِيهِ مِن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ

இன்னும், இந்தக் குர்ஆன் அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து இட்டுக்கட்டப்பட்டதாக இல்லை. எனினும், இது (வேதங்களில்) தனக்கு முன்னுள்ளவற்றை உண்மைப்படுத்தக் கூடியதாகவும், (மார்க்க) சட்டங்களை விவரித்துக் கூறக் கூடியதாகவும் இருக்கிறது. அகிலங்களின் இறைவனிடமிருந்து இ(து இறக்கப்பட்டது என்ப)தில் அறவே சந்தேகமில்லை.

أَمۡ يَقُولُونَ ٱفۡتَرَىٰهُۖ قُلۡ فَأۡتُواْ بِسُورَةٖ مِّثۡلِهِۦ وَٱدۡعُواْ مَنِ ٱسۡتَطَعۡتُم مِّن دُونِ ٱللَّهِ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

“இதை (நம் தூதர்) இட்டுக்கட்டினார்” என அவர்கள் கூறுகிறார்களா? (நபியே!) கூறுவீராக! “ஆக, நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். இன்னும், அல்லாஹ்வையன்றி உங்களுக்கு முடிந்தவர்களை (உங்கள் உதவிக்கு) அழைத்துக் கொள்ளுங்கள்!”

بَلۡ كَذَّبُواْ بِمَا لَمۡ يُحِيطُواْ بِعِلۡمِهِۦ وَلَمَّا يَأۡتِهِمۡ تَأۡوِيلُهُۥۚ كَذَٰلِكَ كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۖ فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلظَّـٰلِمِينَ

மாறாக, எதைப் பற்றிய அறிவை இவர்கள் சூழ்ந்தறியவில்லையோ அதைப் பொய்ப்பித்தனர். அதன் விளக்கமோ இதுவரை இவர்களுக்கு வரவில்லை. இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே (அவர்கள் அறியாததை) பொய்ப்பித்தனர். ஆகவே, அநியாயக்காரர்களின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதை (நபியே!) கவனிப்பீராக!

وَمِنۡهُم مَّن يُؤۡمِنُ بِهِۦ وَمِنۡهُم مَّن لَّا يُؤۡمِنُ بِهِۦۚ وَرَبُّكَ أَعۡلَمُ بِٱلۡمُفۡسِدِينَ

இன்னும், இ(ந்த வேதத்)தை நம்பிக்கை கொள்பவரும் அவர்களில் உண்டு; இன்னும், இதை நம்பிக்கை கொள்ளாதவரும் அவர்களில் உண்டு. இன்னும், உம் இறைவன் விஷமிகளை மிக அறிந்தவன்.

Surah tamil Translation and Transliteration

In Surah you can read the translation of Ahmad Raza Khan who was a renowned scholar of the Islamic world and his translation book is known as Kanzul Imaan. You can read the transliteration of Surah which will help you to understand how to read the Arabic text. Apart from that, we have included a Word-By-Word tamil Translation of the Arabic text of Surah .

Surah tamil Tafsir/Tafseer (Commentry)

In Surah we have included two Tafseer (Commentary) in tamil. The first one is from Mufti Ahmad Yaar Khan who was a well-known scholar. In this tafsir, we have also included the most popular Tafsir Ibn-Kathir which is the most comprehensive tafsir available in the world. You can read both or any one of your choice.

Sign up for Newsletter

×

📱 Download Our Quran App

For a faster and smoother experience,
install our mobile app now.

Download Now