சூரா யூனுஸ் - தமிழ் அனுவாதம், லிப்யந்தரன், தஃப்சீர் - இருந்து [40-50] வரை

Read More
Read Less
 

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

 

وَإِن كَذَّبُوكَ فَقُل لِّي عَمَلِي وَلَكُمۡ عَمَلُكُمۡۖ أَنتُم بَرِيٓـُٔونَ مِمَّآ أَعۡمَلُ وَأَنَا۠ بَرِيٓءٞ مِّمَّا تَعۡمَلُونَ

(நபியே!) அவர்கள் உம்மை பொய்ப்பித்தால், “என் செயல் எனக்கு; இன்னும், உங்கள் செயல் உங்களுக்கு; நான் செய்வதிலிருந்து நீங்கள் நீங்கியவர்கள்; இன்னும், நீங்கள் செய்வதிலிருந்து நான் நீங்கியவன்” என்று கூறுவீராக!

وَمِنۡهُم مَّن يَسۡتَمِعُونَ إِلَيۡكَۚ أَفَأَنتَ تُسۡمِعُ ٱلصُّمَّ وَلَوۡ كَانُواْ لَا يَعۡقِلُونَ

இன்னும், அவர்களில் உம் பக்கம் (நீர் கூறும் உண்மைகளை) செவியுறுபவர்களும் உண்டு. (ஆனால், அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.) ஆக, செவிடர்களை, - அவர்கள் சிந்தித்து புரியாதவர்களாக இருந்தாலும் - நீர் கேட்க வைப்பீரா? (அது உம்மால் முடியுமா?)

وَمِنۡهُم مَّن يَنظُرُ إِلَيۡكَۚ أَفَأَنتَ تَهۡدِي ٱلۡعُمۡيَ وَلَوۡ كَانُواْ لَا يُبۡصِرُونَ

இன்னும், உம் பக்கம் (உமது தெளிவான அத்தாட்சிகளை கண்களால்) பார்ப்பவரும் அவர்களில் உண்டு. (ஆனால், அவர்கள் அவற்றை நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.) ஆக, குருடர்களை, - அவர்கள் பார்க்காதவர்களாக இருந்தாலும் - நீர் நேர்வழி செலுத்துவீரா? (அது உம்மால் முடியுமா?)

إِنَّ ٱللَّهَ لَا يَظۡلِمُ ٱلنَّاسَ شَيۡـٔٗا وَلَٰكِنَّ ٱلنَّاسَ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ

நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு ஒரு சிறிதும் அநீதியிழைக்க மாட்டான். எனினும், மனிதர்கள் தங்களுக்குத் தாமே அநீதியிழைக்கிறார்கள்.

وَيَوۡمَ يَحۡشُرُهُمۡ كَأَن لَّمۡ يَلۡبَثُوٓاْ إِلَّا سَاعَةٗ مِّنَ ٱلنَّهَارِ يَتَعَارَفُونَ بَيۡنَهُمۡۚ قَدۡ خَسِرَ ٱلَّذِينَ كَذَّبُواْ بِلِقَآءِ ٱللَّهِ وَمَا كَانُواْ مُهۡتَدِينَ

இன்னும், அவன் அவர்களை ஒன்று திரட்டும் நாளில், - பகலில் ஒரு (சொற்ப) நேரத்தைத் தவிர (உலகில்) அவர்கள் தங்கி இருக்கவில்லை என்பது போன்று (அவர்களுக்கு) தோன்றும். தங்களுக்குள் (ஒருவரையொருவர்) அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்ப்பித்தவர்கள் திட்டமாக நஷ்டமடைந்தார்கள். இன்னும், அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக இருக்கவில்லை.

وَإِمَّا نُرِيَنَّكَ بَعۡضَ ٱلَّذِي نَعِدُهُمۡ أَوۡ نَتَوَفَّيَنَّكَ فَإِلَيۡنَا مَرۡجِعُهُمۡ ثُمَّ ٱللَّهُ شَهِيدٌ عَلَىٰ مَا يَفۡعَلُونَ

(நபியே!) இன்னும், நாம் அவர்களுக்கு வாக்களிக்கும் (தண்டனைகளில்) சிலவற்றை (அவர்கள் மீது இறக்கி உம் வாழ்விலேயே) உமக்குக் காண்பிப்போம்; அல்லது, (அதற்கு முன்) உம்மை உயிர் கைப்பற்றிக் கொள்வோம். ஆக, (எவ்வாறாயினும்) அவர்களுடைய மீளுமிடம் நம் பக்கமே இருக்கிறது. பிறகு, அவர்கள் செய்தவற்றிற்கு எல்லாம் அல்லாஹ் சாட்சியாளன் ஆவான். (அவர்களின் செயல்கள் அவனுக்கு மறைந்தவை அல்ல. ஆகவே, அவன் அவர்களுக்கு தகுந்த கூலி கொடுப்பான்.)

وَلِكُلِّ أُمَّةٖ رَّسُولٞۖ فَإِذَا جَآءَ رَسُولُهُمۡ قُضِيَ بَيۡنَهُم بِٱلۡقِسۡطِ وَهُمۡ لَا يُظۡلَمُونَ

இன்னும், (சென்று போன) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதர் இருந்தார். ஆக, அவர்களுடைய தூதர் (மறுமையில் அவர்களுக்கு முன்) வரும்போது அவர்களுக்கிடையில் நீதமாக தீர்ப்பளிக்கப்படும். இன்னும், அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்.

وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡوَعۡدُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

இன்னும், (நபியே! உம்மையும் முஃமின்களையும் நோக்கி) “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (தண்டனையின்) இந்த வாக்கு எப்போது (வரும்)?” என்று அவர்கள் கேட்கிறார்கள்.

قُل لَّآ أَمۡلِكُ لِنَفۡسِي ضَرّٗا وَلَا نَفۡعًا إِلَّا مَا شَآءَ ٱللَّهُۗ لِكُلِّ أُمَّةٍ أَجَلٌۚ إِذَا جَآءَ أَجَلُهُمۡ فَلَا يَسۡتَـٔۡخِرُونَ سَاعَةٗ وَلَا يَسۡتَقۡدِمُونَ

(அதற்கு நபியே!) கூறுவீராக! “அல்லாஹ் நாடியதைத் தவிர (எவ்வித) தீமைக்கோ நன்மைக்கோ நான் எனக்கு உரிமை பெறமாட்டேன். ஒவ்வொரு வகுப்பாருக்கும் ஒரு (குறிப்பிட்ட) தவணை உண்டு. அவர்களுடைய தவணை வந்தால் (அதிலிருந்து) சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள்; இன்னும், முந்தவும் மாட்டார்கள்.”

قُلۡ أَرَءَيۡتُمۡ إِنۡ أَتَىٰكُمۡ عَذَابُهُۥ بَيَٰتًا أَوۡ نَهَارٗا مَّاذَا يَسۡتَعۡجِلُ مِنۡهُ ٱلۡمُجۡرِمُونَ

(மேலும்) கூறுவீராக: (இணைவைப்பவர்களே!) “அவனுடைய தண்டனை இரவில்; அல்லது, பகலில் உங்களுக்கு வந்தால் (அதை உங்களால் தடுக்க முடியுமா)? என்பதை எனக்கு நீங்கள் அறிவியுங்கள்.” (நபியே!) (இக்)குற்றவாளிகள் எதை அவசரமாகத் தேடுகிறார்கள்?

Surah tamil Translation and Transliteration

In Surah you can read the translation of Ahmad Raza Khan who was a renowned scholar of the Islamic world and his translation book is known as Kanzul Imaan. You can read the transliteration of Surah which will help you to understand how to read the Arabic text. Apart from that, we have included a Word-By-Word tamil Translation of the Arabic text of Surah .

Surah tamil Tafsir/Tafseer (Commentry)

In Surah we have included two Tafseer (Commentary) in tamil. The first one is from Mufti Ahmad Yaar Khan who was a well-known scholar. In this tafsir, we have also included the most popular Tafsir Ibn-Kathir which is the most comprehensive tafsir available in the world. You can read both or any one of your choice.

Sign up for Newsletter

×

📱 Download Our Quran App

For a faster and smoother experience,
install our mobile app now.

Download Now