அ(ந்த இணைவைப்ப)வர்கள் அவனை அன்றி (பல) கடவுள்களை (வழிபாடுகளுக்கு) ஏற்படுத்திக் கொண்டனர். அந்த கடவுள்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களோ (மனிதர்களால்) செய்யப்படுகிறார்கள். இன்னும், அவர்கள் தங்களுக்குத் தாமே தீமை செய்வதற்கும் நன்மை செய்வதற்கும் சக்தி பெற மாட்டார்கள். இன்னும், (பிறரின்) இறப்பிற்கும் வாழ்விற்கும் மீண்டும் உயிர்த்தெழச் செய்வதற்கும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள்.