இன்னும், அல்லாஹ் தனது தூதருக்கு அவர்களிடமிருந்து (அவர்களின் செல்வங்களில்) எதை (சண்டையின்றி) உரிமையாக்கிக் கொடுத்தானோ அவற்றை அடைவதற்காக நீங்கள் (உங்கள்) குதிரைகளையோ ஒட்டகங்களையோ ஓட்டவில்லை. (உங்கள் முயற்சியால் தூதருக்கு இந்த செல்வம் கிடைக்கவில்லை.) என்றாலும், அல்லாஹ் தனது தூதர்களை, தான் நாடுகிறவர்கள் மீது சாட்டுகிறான். (ஆகவே, அந்த எதிரிகள் சண்டையின்றியே பணிந்துவிடுவார்கள்.) அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.