குரான் - 11:81 சூரா ஹூத் மொழிபெயர்ப்பு, லிப்யந்தரணம் மற்றும் தஃப்சீர் (தஃப்சீர்).

قَالُواْ يَٰلُوطُ إِنَّا رُسُلُ رَبِّكَ لَن يَصِلُوٓاْ إِلَيۡكَۖ فَأَسۡرِ بِأَهۡلِكَ بِقِطۡعٖ مِّنَ ٱلَّيۡلِ وَلَا يَلۡتَفِتۡ مِنكُمۡ أَحَدٌ إِلَّا ٱمۡرَأَتَكَۖ إِنَّهُۥ مُصِيبُهَا مَآ أَصَابَهُمۡۚ إِنَّ مَوۡعِدَهُمُ ٱلصُّبۡحُۚ أَلَيۡسَ ٱلصُّبۡحُ بِقَرِيبٖ

(வானவர்கள்) கூறினார்கள்: “லூத்தே! நிச்சயமாக நாங்கள் உம் இறைவனின் (வானவ) தூதர்கள். (ஆகவே, இவர்கள்) அறவே உம் பக்கம் வந்து சேர மாட்டார்கள். ஆகவே, உம் மனைவியைத் தவிர, (மற்ற) உம் குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வீராக. இன்னும், உங்களில் ஒருவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களை அடைகின்ற தண்டனை நிச்சயமாக அவளையும் அடையக்கூடியதே. நிச்சயமாக அவர்களின் (தண்டனை இறங்குவதற்கு) வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற் காலையாகும். விடியற்காலை சமீபமாக இல்லையா?”

ஹூத் அனைத்து ஆயத்துக்கள்

Sign up for Newsletter