நூஹ் கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்தனர். இன்னும் எவனுடைய செல்வமும் பிள்ளையும் நஷ்டத்தைத் தவிர (நன்மையை) அவனுக்கு அதிகப்படுத்தவில்லையோ அவனையே இவர்கள் பின்பற்றினர்.” (அவர்கள் தாமும் வழிகெட்டு, பிறரையும் வழிகெடுக்கிற வசதிபடைத்த தலைவர்களைத்தான் பின்பற்றினார்கள்.)