பிறகு, அந்த இந்திரியத் துளியை ஓர் இரத்தக் கட்டியாக (-கருவாக) நாம் ஆக்கினோம். ஆக, அந்த இரத்தக் கட்டியை ஒரு சதைத் துண்டாக நாம் ஆக்கினோம். ஆக, அந்த சதைத் துண்டை எலும்புகளாக நாம் ஆக்கினோம். ஆக, அந்த எலும்புகளுக்கு சதையை அணிவித்தோம். பிறகு அவனை (உயிர் ஊதி அதன் மூலம்) வேறு ஒரு (புதிய) படைப்பாக நாம் உருவாக்கினோம். (பொருள்களை) செய்பவர்களில் மிக அழகிய (முறையில்) செய்பவனாகிய அல்லாஹ் மிகுந்த பாக்கியவான், மிகவும் உயர்ந்தவன், மிக்க மகத்துவமானவன் ஆவான்.