அல்லாஹ் (தனக்கு) குழந்தையை எடுத்துக் கொள்ளவில்லை. இன்னும், (படைப்புகளை அவன் முதலாவதாக படைத்தபோது) அவனுடன் வேறு கடவுள்கள் யாரும் இருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் ஒவ்வொரு கடவுளும், தான் படைத்ததை (தனியாக) கொண்டு சென்று விடுவார்கள். இன்னும் (தங்களுக்குள் சண்டையிட்டு) சிலர், சிலரை வென்று இருப்பார்கள். (இறைவனைப் பற்றி) அவர்கள் எதை வர்ணிக்கிறார்களோ அதை விட்டு அல்லாஹ் மகா பரிசுத்தமானவன் ஆவான். (ஆக, அவனுக்கு குழந்தையும் இல்லை, பங்காளியும் இல்லை, அவனுடன் வேறு கடவுளும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் இல்லை.)