بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَلَمَّا جَآءَهُمۡ رَسُولٞ مِّنۡ عِندِ ٱللَّهِ مُصَدِّقٞ لِّمَا مَعَهُمۡ نَبَذَ فَرِيقٞ مِّنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ كِتَٰبَ ٱللَّهِ وَرَآءَ ظُهُورِهِمۡ كَأَنَّهُمۡ لَا يَعۡلَمُونَ
இன்னும், அவர்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தக்கூடிய ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்தபோது, வேதம் கொடுக்கப்பட்டவர்களில் ஒரு கூட்டம் அல்லாஹ்வுடைய (இந்த) வேதத்தை (நம்பிக்கை கொள்ளாமல் அதை) - அவர்கள் அறியாதது போல் - தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்தார்கள்.
وَٱتَّبَعُواْ مَا تَتۡلُواْ ٱلشَّيَٰطِينُ عَلَىٰ مُلۡكِ سُلَيۡمَٰنَۖ وَمَا كَفَرَ سُلَيۡمَٰنُ وَلَٰكِنَّ ٱلشَّيَٰطِينَ كَفَرُواْ يُعَلِّمُونَ ٱلنَّاسَ ٱلسِّحۡرَ وَمَآ أُنزِلَ عَلَى ٱلۡمَلَكَيۡنِ بِبَابِلَ هَٰرُوتَ وَمَٰرُوتَۚ وَمَا يُعَلِّمَانِ مِنۡ أَحَدٍ حَتَّىٰ يَقُولَآ إِنَّمَا نَحۡنُ فِتۡنَةٞ فَلَا تَكۡفُرۡۖ فَيَتَعَلَّمُونَ مِنۡهُمَا مَا يُفَرِّقُونَ بِهِۦ بَيۡنَ ٱلۡمَرۡءِ وَزَوۡجِهِۦۚ وَمَا هُم بِضَآرِّينَ بِهِۦ مِنۡ أَحَدٍ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۚ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمۡ وَلَا يَنفَعُهُمۡۚ وَلَقَدۡ عَلِمُواْ لَمَنِ ٱشۡتَرَىٰهُ مَا لَهُۥ فِي ٱلۡأٓخِرَةِ مِنۡ خَلَٰقٖۚ وَلَبِئۡسَ مَا شَرَوۡاْ بِهِۦٓ أَنفُسَهُمۡۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ
இன்னும், (யூதர்கள்) ஸுலைமானுடைய ஆட்சியில் ஷைத்தான்கள் ஓதியவற்றைப் பின்பற்றினார்கள். ஸுலைமான் நிராகரிக்கவில்லை. எனினும் ஷைத்தான்கள்தான் நிராகரித்தார்கள். (அவர்கள்) மனிதர்களுக்கு சூனியத்தையும் பாபிலோனில் ஹாரூத், மாரூத் (என்ற இரு) வானவர்களுக்கு இறக்கப்பட்ட (மந்திரத்)தையும் கற்றுக்கொடுத்தார்கள். அவ்விருவானவர்களோ, “நாங்களெல்லாம் ஒரு சோதனையாவோம். ஆகவே. (இதைக் கற்று) நீ நிராகரிக்காதே!” என்று கூறும் வரை (அதை) (யார்) ஒருவருக்கும் கற்றுக் கொடுக்கவில்லை. ஆக, அவர்கள் ஆணுக்கும் அவன் மனைவிக்கும் இடையில் எதன் மூலம் பிரிவினை உண்டாக்குவார்களோ அதை அவ்விரு(வான)வரிடமிருந்து கற்றார்கள். ஆனால், அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தவிர அதன் மூலம் அவர்கள் (யார்) ஒருவருக்கும் தீங்கிழைப்பவர்களாக இல்லை. இன்னும், அவர்களுக்குப் பலனளிக்காததை, அவர்களுக்குத் தீங்கிழைக்கக்கூடிய (மந்திரத்)தை அவர்கள் கற்கிறார்கள். இன்னும், அதை எவர் விலைக்கு வாங்கினாரோ அவருக்கு மறுமையில் எந்த பாக்கியமும் இல்லை என்பதை திட்டவட்டமாக (அவர்கள்) அறிந்திருந்தார்கள். அவர்கள் தங்களை எதற்கு பகரமாக விற்றார்களோ அது திட்டமாக கெட்டதாகும். (இதை) அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!
وَلَوۡ أَنَّهُمۡ ءَامَنُواْ وَٱتَّقَوۡاْ لَمَثُوبَةٞ مِّنۡ عِندِ ٱللَّهِ خَيۡرٞۚ لَّوۡ كَانُواْ يَعۡلَمُونَ
இன்னும், நிச்சயமாக அவர்கள் (இவ்வேதத்தை) நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வை அஞ்சி (சூனியத்தை விட்டு விலகி) இருந்தால் அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்கு) கிடைக்கும் சன்மானம் திட்டமாக மிகச் சிறந்ததாகும். (இதை) அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَقُولُواْ رَٰعِنَا وَقُولُواْ ٱنظُرۡنَا وَٱسۡمَعُواْۗ وَلِلۡكَٰفِرِينَ عَذَابٌ أَلِيمٞ
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (நபியை நோக்கி) “ராஇனா” என்று கூறாதீர்கள். மாறாக, “உன்ளுர்னா” என்று கூறுங்கள். (நபியின் கூற்றை கவனமாக) செவியுறுங்கள். நிராகரிப்பாளர்களுக்குத் துன்புறுத்தக்கூடிய தண்டனை உண்டு.
مَّا يَوَدُّ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ وَلَا ٱلۡمُشۡرِكِينَ أَن يُنَزَّلَ عَلَيۡكُم مِّنۡ خَيۡرٖ مِّن رَّبِّكُمۡۚ وَٱللَّهُ يَخۡتَصُّ بِرَحۡمَتِهِۦ مَن يَشَآءُۚ وَٱللَّهُ ذُو ٱلۡفَضۡلِ ٱلۡعَظِيمِ
(நம்பிக்கையாளர்களே!) வேதக்காரர்கள் இன்னும் இணைவைப்பவர்கள் ஆகிய நிராகரிப்பாளர்கள் (தங்களிடம் உள்ளதை விட) சிறந்தது எதுவும் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்படுவதை விரும்ப மாட்டார்கள். என்றாலும், அல்லாஹ் - தான் நாடுகிறவர்களுக்குத் தனது கருணையை - விசேஷமாக வழங்குகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன் ஆவான்.
۞مَا نَنسَخۡ مِنۡ ءَايَةٍ أَوۡ نُنسِهَا نَأۡتِ بِخَيۡرٖ مِّنۡهَآ أَوۡ مِثۡلِهَآۗ أَلَمۡ تَعۡلَمۡ أَنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ
(நபியே!) நாம் ஒரு வசனத்தை மாற்றினாலும் அல்லது அதை நாம் மறக்கடித்தாலும் அதைவிடச் சிறந்ததை அல்லது அது போன்றதைக் கொண்டு வருவோம். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை நீர் அறியவில்லையா?
قَدِيرٌ أَلَمۡ تَعۡلَمۡ أَنَّ ٱللَّهَ لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِن وَلِيّٖ وَلَا نَصِيرٍ
(நபியே!) நிச்சயமாக அல்லாஹ், அவனுக்கே வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி உரியது என்பதை நீர் அறியவில்லையா? இன்னும், அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு பொறுப்பாளருமில்லை; உதவியாளருமில்லை.
أَمۡ تُرِيدُونَ أَن تَسۡـَٔلُواْ رَسُولَكُمۡ كَمَا سُئِلَ مُوسَىٰ مِن قَبۡلُۗ وَمَن يَتَبَدَّلِ ٱلۡكُفۡرَ بِٱلۡإِيمَٰنِ فَقَدۡ ضَلَّ سَوَآءَ ٱلسَّبِيلِ
(இதற்கு) முன்னர் மூஸாவிடம் கேள்வி கேட்கப்பட்டது போல் உங்கள் தூதரிடம் நீங்கள் கேள்வி கேட்க விரும்புகிறீர்களா? எவர் (இந்த தூதரையும் அவர் கூறுவதையும்) நம்பிக்கை கொள்வதற்கு பதிலாக (அதை) நிராகரிப்பதை எடுத்துக் கொள்வாரோ அவர் திட்டமாக நேர்வழியிலிருந்து வழிதவறிவிட்டார்.
وَدَّ كَثِيرٞ مِّنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ لَوۡ يَرُدُّونَكُم مِّنۢ بَعۡدِ إِيمَٰنِكُمۡ كُفَّارًا حَسَدٗا مِّنۡ عِندِ أَنفُسِهِم مِّنۢ بَعۡدِ مَا تَبَيَّنَ لَهُمُ ٱلۡحَقُّۖ فَٱعۡفُواْ وَٱصۡفَحُواْ حَتَّىٰ يَأۡتِيَ ٱللَّهُ بِأَمۡرِهِۦٓۗ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ
வேதக்காரர்களில் அதிகமானவர்கள் - அவர்களுக்கு உண்மை (இன்னதெனத்) தெளிவானதற்கு பின்னர், அவர்களுடைய உள்ளங்களில் (உங்கள் மீது) உள்ள பொறாமையினால், - “நீங்கள் நம்பிக்கை கொண்டதற்கு பின்னர் உங்களை நிராகரிப்பாளர்களாக மாற்ற வேண்டுமே” என்று விரும்புகிறார்கள். ஆக, அல்லாஹ் தனது கட்டளையைக் கொண்டுவருகின்ற வரை (அவர்களை) மன்னித்து விடுங்கள்! இன்னும், புறக்கணித்து விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَۚ وَمَا تُقَدِّمُواْ لِأَنفُسِكُم مِّنۡ خَيۡرٖ تَجِدُوهُ عِندَ ٱللَّهِۗ إِنَّ ٱللَّهَ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ
இன்னும், நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்! இன்னும், ஸகாத்தை கொடுங்கள். இன்னும், நீங்கள் நன்மையில் எதை உங்களுக்காக முற்படுத்துவீர்களோ அல்லாஹ்விடம் (மறுமையில்) அதைப் பெறுவீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்.