بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَمَاتُواْ وَهُمۡ كُفَّارٌ أُوْلَـٰٓئِكَ عَلَيۡهِمۡ لَعۡنَةُ ٱللَّهِ وَٱلۡمَلَـٰٓئِكَةِ وَٱلنَّاسِ أَجۡمَعِينَ
நிச்சயமாக எவர்கள் நிராகரித்தார்களோ, இன்னும், அவர்கள் நிராகரித்தவர்களாகவே இறந்தார்களோ, அவர்கள் மீது அல்லாஹ் உடைய சாபமும், வானவர்கள்; இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகும்.
خَٰلِدِينَ فِيهَا لَا يُخَفَّفُ عَنۡهُمُ ٱلۡعَذَابُ وَلَا هُمۡ يُنظَرُونَ
அ(ந்த சாபத்)தில் (அவர்கள்) நிரந்தரமாக இருப்பார்கள். (மறுமையில்) அவர்களுக்கு தண்டனை இலேசாக்கப்படாது. இன்னும், அவர்கள் அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள்.
وَإِلَٰهُكُمۡ إِلَٰهٞ وَٰحِدٞۖ لَّآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلرَّحۡمَٰنُ ٱلرَّحِيمُ
இன்னும், (மனிதர்களே! நீங்கள் உண்மையில் வணங்கத் தகுதியான) உங்கள் இறைவன் ஒரே ஓர் இறைவன்தான். பேரருளாளன், பேரன்பாளனாகிய அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை.
إِنَّ فِي خَلۡقِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَٱخۡتِلَٰفِ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِ وَٱلۡفُلۡكِ ٱلَّتِي تَجۡرِي فِي ٱلۡبَحۡرِ بِمَا يَنفَعُ ٱلنَّاسَ وَمَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلسَّمَآءِ مِن مَّآءٖ فَأَحۡيَا بِهِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَا وَبَثَّ فِيهَا مِن كُلِّ دَآبَّةٖ وَتَصۡرِيفِ ٱلرِّيَٰحِ وَٱلسَّحَابِ ٱلۡمُسَخَّرِ بَيۡنَ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَعۡقِلُونَ
நிச்சயமாக வானங்கள் இன்னும் பூமியைப் படைத்திருப்பதிலும், இரவு, பகல் மாறுவதிலும், மனிதர்களுக்கு பலன் தருபவற்றை (ஏற்றி)க் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், வானத்திலிருந்து அல்லாஹ் (மழை) நீரை இறக்கி, அதன் மூலம் பூமியை - அது இறந்த பின்னர் - உயிர்ப்பிப்பதிலும், கால்நடைகளை எல்லாம் பூமியில் பரப்பியதிலும், காற்றை(ப் பலகோணங்களில்) திருப்பிவிடுவதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் கட்டுப்படுத்தப்பட்ட மேகத்திலும் திட்டமாக (பல) அத்தாட்சிகள் சிந்தித்துப் புரிகிற மக்களுக்கு இருக்கின்றன.
وَمِنَ ٱلنَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ ٱللَّهِ أَندَادٗا يُحِبُّونَهُمۡ كَحُبِّ ٱللَّهِۖ وَٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَشَدُّ حُبّٗا لِّلَّهِۗ وَلَوۡ يَرَى ٱلَّذِينَ ظَلَمُوٓاْ إِذۡ يَرَوۡنَ ٱلۡعَذَابَ أَنَّ ٱلۡقُوَّةَ لِلَّهِ جَمِيعٗا وَأَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعَذَابِ
மக்களில் அல்லாஹ்வை அன்றி (அவனுக்கு) சமமானவர்களை (-கற்பனை தெய்வங்களை) ஏற்படுத்தியவர்களும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் மீது அன்பு வைக்கப்படுவது போல் அவர்கள் அவற்றின் மீது அன்பு வைக்கிறார்கள். நம்பிக்கையாளர்கள் (உண்மையான இறைவனாகிய) அல்லாஹ்வின் மீதுதான் அதிகம் அன்பு வைப்பார்கள். அநியாயக்காரர்கள் (நரக) தண்டனையை (நேருக்கு நேர் கண்ணால்) காணும்போது, (தங்களது இறுதி முடிவு என்ன என்பதை) பார்த்துவிட்டால், “அனைத்து ஆற்றலும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது; (தாம் வணங்கிய தெய்வங்கள் சக்தி அற்றவை;) தண்டிப்பதில் அல்லாஹ் கடினமானவன்; (நம்மை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து நமது தெய்வங்களால் காப்பாற்ற முடியாது)” என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
إِذۡ تَبَرَّأَ ٱلَّذِينَ ٱتُّبِعُواْ مِنَ ٱلَّذِينَ ٱتَّبَعُواْ وَرَأَوُاْ ٱلۡعَذَابَ وَتَقَطَّعَتۡ بِهِمُ ٱلۡأَسۡبَابُ
(மதத் தலைவர்களும் அவர்களை பின்பற்றுபவர்களும் மறுமையில் நரக) தண்டனையைக் கண்கூடாக பார்த்த சமயத்தில் பின்பற்றப்பட்ட (மதத் தலை)வர்களோ (தங்களை) பின்பற்றியவர்களை விட்டு விலகிவிடும்போது; (அவர்கள் எல்லோரும் தங்கள் வெற்றிக்காக நம்பியிருந்த) காரணிகள் (-சிலைகளும் அவற்றுக்கு செய்த வழிபாடுகளும்) அவர்களை விட்டு துண்டித்து (பயனற்று போய்)விடும்போது (“அனைத்து ஆற்றலும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது; தாம் வணங்கிய தெய்வங்களுக்கு அறவே சக்தி இல்லை; தண்டிப்பதில் அல்லாஹ் கடினமானவன்; அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து நமது தெய்வங்களால் நம்மை காப்பாற்ற முடியாது” என்பதை அவர்கள் எல்லோரும் திட்டமாக புரிந்து கொள்வார்கள்).
وَقَالَ ٱلَّذِينَ ٱتَّبَعُواْ لَوۡ أَنَّ لَنَا كَرَّةٗ فَنَتَبَرَّأَ مِنۡهُمۡ كَمَا تَبَرَّءُواْ مِنَّاۗ كَذَٰلِكَ يُرِيهِمُ ٱللَّهُ أَعۡمَٰلَهُمۡ حَسَرَٰتٍ عَلَيۡهِمۡۖ وَمَا هُم بِخَٰرِجِينَ مِنَ ٱلنَّارِ
இன்னும், பின்பற்றியவர்கள் (அப்போது) கூறுவார்கள்: “(உலகிற்கு ஒருமுறை) திரும்பச் செல்வது நமக்கு சாத்தியமானால் அவர்கள் எங்களைவிட்டு (இப்போது) விலகியதுபோல் நாங்களும் அவர்களைவிட்டு விலகிவிடுவோம்.” இவ்வாறே, அவர்களின் செயல்களை அவர்கள் மீது கடும் துயரங்களாக அமையும்படி அல்லாஹ் அவர்களுக்கு காண்பிப்பான். இன்னும், அவர்கள் (நரக) நெருப்பிலிருந்து ஒருபோதும் வெளியேற மாட்டார்கள்.
يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ كُلُواْ مِمَّا فِي ٱلۡأَرۡضِ حَلَٰلٗا طَيِّبٗا وَلَا تَتَّبِعُواْ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِۚ إِنَّهُۥ لَكُمۡ عَدُوّٞ مُّبِينٌ
மக்களே! பூமியிலுள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட நல்லதையே உண்ணுங்கள். இன்னும், ஷைத்தானின் அடிச்சுவடுகளை (-அவன் உங்களை அழைக்கும் அவனது பாதைகளை)ப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரி ஆவான்.
إِنَّمَا يَأۡمُرُكُم بِٱلسُّوٓءِ وَٱلۡفَحۡشَآءِ وَأَن تَقُولُواْ عَلَى ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ
அவன் உங்களுக்கு ஏவுவதெல்லாம் தீமையையும், மானக்கேடானதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாக) கூறுவதையும்தான்.
وَإِذَا قِيلَ لَهُمُ ٱتَّبِعُواْ مَآ أَنزَلَ ٱللَّهُ قَالُواْ بَلۡ نَتَّبِعُ مَآ أَلۡفَيۡنَا عَلَيۡهِ ءَابَآءَنَآۚ أَوَلَوۡ كَانَ ءَابَآؤُهُمۡ لَا يَعۡقِلُونَ شَيۡـٔٗا وَلَا يَهۡتَدُونَ
இன்னும், அல்லாஹ் இறக்கியதைப் பின்பற்றுங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால், “(நாங்கள் அதைப் பின்பற்ற மாட்டோம்.) மாறாக, நாங்கள் எங்கள் மூதாதைகளை எதில் (-எந்தக் கொள்கையில்) இருக்கக் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்” எனக் கூறுகிறார்கள். அவர்களுடைய மூதாதைகள் எதையும் அறியாதவர்களாகவும் நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா (அவர்களை இவர்கள் பின்பற்றுவார்கள்)?