சூரா அல்-பகரா - தமிழ் அனுவாதம், லிப்யந்தரன், தஃப்சீர் - இருந்து [260-270] வரை

Read More
Read Less
 

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

 

مَّثَلُ ٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنۢبَتَتۡ سَبۡعَ سَنَابِلَ فِي كُلِّ سُنۢبُلَةٖ مِّاْئَةُ حَبَّةٖۗ وَٱللَّهُ يُضَٰعِفُ لِمَن يَشَآءُۚ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ

அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களை தர்மம் புரிபவர்களின் உதாரணம், ஏழு கதிர்களை முளைக்க வைத்த ஒரு விதையின் உதாரணத்தைப் போன்றாகும். ஒவ்வொரு கதிரிலும் நூறு விதைகள் வந்தன. அல்லாஹ், தான் நாடுபவர்களுக்கு (நற்கூலியை)ப் பன்மடங்காக்குகிறான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான்.

ٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ ثُمَّ لَا يُتۡبِعُونَ مَآ أَنفَقُواْ مَنّٗا وَلَآ أَذٗى لَّهُمۡ أَجۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ

எவர்கள் தங்கள் செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்தார்களோ, பிறகு தாங்கள் தர்மம் செய்ததை பின்தொடர்ந்து சொல்லிக்காட்டுவதையும் துன்புறுத்துவதையும் செய்யவில்லையோ அவர்களுக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. இன்னும் அவர்கள் மீது பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

۞قَوۡلٞ مَّعۡرُوفٞ وَمَغۡفِرَةٌ خَيۡرٞ مِّن صَدَقَةٖ يَتۡبَعُهَآ أَذٗىۗ وَٱللَّهُ غَنِيٌّ حَلِيمٞ

துன்புறுத்தல் பின்தொடர்கிற தர்மத்தை விட, (-ஒருவருக்கு தர்மம் செய்துவிட்டு, பிறகு அவரை துன்புறுத்துவதை விட) நல்ல சொல்லும் மன்னிப்பும் சிறந்ததாகும் (-அழகிய முறையில், “இல்லை” என்று சொல்லி அனுப்பிவிடுவதும் தர்மம் கேட்டவர் மீது கோபிக்காமல் மன்னித்துவிடுவதும் சிறந்த நடைமுறையாகும்). அல்லாஹ் மகா செல்வந்தன் (எத்தேவையுமற்றவன்), பெரும் சகிப்பாளன் ஆவான்.

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تُبۡطِلُواْ صَدَقَٰتِكُم بِٱلۡمَنِّ وَٱلۡأَذَىٰ كَٱلَّذِي يُنفِقُ مَالَهُۥ رِئَآءَ ٱلنَّاسِ وَلَا يُؤۡمِنُ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۖ فَمَثَلُهُۥ كَمَثَلِ صَفۡوَانٍ عَلَيۡهِ تُرَابٞ فَأَصَابَهُۥ وَابِلٞ فَتَرَكَهُۥ صَلۡدٗاۖ لَّا يَقۡدِرُونَ عَلَىٰ شَيۡءٖ مِّمَّا كَسَبُواْۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡكَٰفِرِينَ

நம்பிக்கையாளர்களே! எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்ளாமல், மக்களுக்கு காண்பிப்பதற்காகத் தனது செல்வத்தைத் தர்மம் செய்(து அதன் நன்மையை வீணாக்கிவிடு)கிறாரோ அவரைப் போன்று (நீங்கள் கொடுத்த) உங்கள் தர்மங்க(ளின் நன்மைக)ளை - (அவற்றை) சொல்லிக் காட்டுவதாலும் (தர்மம் பெற்றவரை) துன்புறுத்துவதாலும் - வீணாக்காதீர்கள். (செய்த தர்மத்தின் நன்மையை வீணாக்கிய) அவனின் உதாரணம், ஒரு வழுக்குப்பாறையின் உதாரணத்தைப் போன்றாகும். அதன் மீது மண் (படர்ந்து) இருந்தது. ஆக, அடை மழை அதன் மீது பெய்தது. ஆகவே, அதை(க் கழுவி) வெறும் பாறையாக விட்டுவிட்டது. (இவ்வாறே அவன் செய்த தர்மத்தின் நன்மையை முகஸ்துதியும், சொல்லிக்காட்டுதலும் அழித்துவிடும்.) (இத்தகைய செயலை செய்த) அவர்கள் (தர்மம்) செய்ததில் (நன்மைகள்) எதையும் பெறுவதற்கு ஆற்றல் பெற மாட்டார்கள். (மன முரண்டாக) நிராகரிக்கின்ற மக்களை அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான்.

وَمَثَلُ ٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُمُ ٱبۡتِغَآءَ مَرۡضَاتِ ٱللَّهِ وَتَثۡبِيتٗا مِّنۡ أَنفُسِهِمۡ كَمَثَلِ جَنَّةِۭ بِرَبۡوَةٍ أَصَابَهَا وَابِلٞ فَـَٔاتَتۡ أُكُلَهَا ضِعۡفَيۡنِ فَإِن لَّمۡ يُصِبۡهَا وَابِلٞ فَطَلّٞۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٌ

இன்னும், எவர்கள் தங்களது செல்வங்களை அல்லாஹ்வின் திருப்தியைத் தேடியும் தங்கள் உள்ளங்களில் (இறை நம்பிக்கையை) உறுதிப்படுத்துவதற்காகவும் தர்மம் செய்கிறார்களோ அவர்களின் (தர்மத்திற்கு) உதாரணம், உயர்ந்த பூமி(யாகிய மலை)யிலுள்ள ஒரு தோட்டத்தின் உதாரணத்தைப் போன்றாகும். அ(ந்த தோட்டத்)தை அடைமழை அடைந்தது. ஆகவே, அது இரு மடங்குகளாக தன் பலனைத் தந்தது. ஆக, அதை அடைமழை அடையாவிட்டாலும் சிறு தூறல் அதை அடைவது போதும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்.

أَيَوَدُّ أَحَدُكُمۡ أَن تَكُونَ لَهُۥ جَنَّةٞ مِّن نَّخِيلٖ وَأَعۡنَابٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ لَهُۥ فِيهَا مِن كُلِّ ٱلثَّمَرَٰتِ وَأَصَابَهُ ٱلۡكِبَرُ وَلَهُۥ ذُرِّيَّةٞ ضُعَفَآءُ فَأَصَابَهَآ إِعۡصَارٞ فِيهِ نَارٞ فَٱحۡتَرَقَتۡۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلۡأٓيَٰتِ لَعَلَّكُمۡ تَتَفَكَّرُونَ

உங்களில் ஒருவர் - அவருக்கு பேரீச்சங்கனிகள் இன்னும் திராட்சைகளின் ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழ் ஆறுகள் ஓடுகின்றன. அதில் எல்லாப் பழங்களும் அவருக்கு இருக்கின்றன. முதுமை அவரை அடைந்தது. இயலாத பலவீனமான குழந்தைகளும் அவருக்கு இருக்கின்றனர். ஆக, (இந்த நிலையில்) நெருப்புடன் கூடிய புயல் காற்று அதை அடைந்து, அதுவோ எரித்து (சாம்பலாகி) விடுவதை - விரும்புவாரா? நீங்கள் சிந்திப்பதற்காக, அல்லாஹ் அத்தாட்சிகளை உங்களுக்கு இவ்வாறு விவரிக்கிறான்.

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَنفِقُواْ مِن طَيِّبَٰتِ مَا كَسَبۡتُمۡ وَمِمَّآ أَخۡرَجۡنَا لَكُم مِّنَ ٱلۡأَرۡضِۖ وَلَا تَيَمَّمُواْ ٱلۡخَبِيثَ مِنۡهُ تُنفِقُونَ وَلَسۡتُم بِـَٔاخِذِيهِ إِلَّآ أَن تُغۡمِضُواْ فِيهِۚ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ غَنِيٌّ حَمِيدٌ

நம்பிக்கையாளர்களே! நீங்கள் சம்பாதித்ததிலும், நாம் உங்களுக்கு பூமியிலிருந்து உற்பத்தி செய்து கொடுத்ததிலும் உள்ள நல்ல பொருள்களில் இருந்து தர்மம் செய்யுங்கள். அதிலிருந்து கெட்டதை தர்மம் செய்ய நாடாதீர்கள். (கெட்டது, உங்களுக்குக் கொடுக்கப்பட்டால்) கண் மூடியவர்களாகவே தவிர நீங்கள் அதை வாங்குபவர்களாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் மகா செல்வந்தன் (எத்தேவையுமற்றவன்), பெரும் புகழாளன் என்பதை அறியுங்கள்.

ٱلشَّيۡطَٰنُ يَعِدُكُمُ ٱلۡفَقۡرَ وَيَأۡمُرُكُم بِٱلۡفَحۡشَآءِۖ وَٱللَّهُ يَعِدُكُم مَّغۡفِرَةٗ مِّنۡهُ وَفَضۡلٗاۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٞ

ஷைத்தான் உங்களுக்கு வறுமையை அச்சுறுத்துகிறான். இன்னும், மானக்கேடான (கஞ்சத்தனத்)தை உங்களுக்கு ஏவுகிறான். அல்லாஹ் (உங்கள் தர்மத்திற்கு) தன்னிடமிருந்து மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான்.

يُؤۡتِي ٱلۡحِكۡمَةَ مَن يَشَآءُۚ وَمَن يُؤۡتَ ٱلۡحِكۡمَةَ فَقَدۡ أُوتِيَ خَيۡرٗا كَثِيرٗاۗ وَمَا يَذَّكَّرُ إِلَّآ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ

அல்லாஹ், தான் நாடியவர்களுக்கு அறிவு ஞானத்தை தருகிறான். எவர் அறிவு ஞானம் தரப்படுகிறாரோ திட்டமாக அதிக நன்மை தரப்பட்டார். நிறைவான அறிவுடையவர்கள் தவிர (யாரும்) உபதேசம் பெறமாட்டார்.

وَمَآ أَنفَقۡتُم مِّن نَّفَقَةٍ أَوۡ نَذَرۡتُم مِّن نَّذۡرٖ فَإِنَّ ٱللَّهَ يَعۡلَمُهُۥۗ وَمَا لِلظَّـٰلِمِينَ مِنۡ أَنصَارٍ

இன்னும், தர்மத்தில் எதை நீங்கள் தர்மம் செய்தாலும் அல்லது நேர்ச்சையில் எதை நேர்ச்சை செய்து நிறைவேற்றினாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிவான். இன்னும், அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்களில் யாரும் இல்லை.

Surah tamil Translation and Transliteration

In Surah you can read the translation of Ahmad Raza Khan who was a renowned scholar of the Islamic world and his translation book is known as Kanzul Imaan. You can read the transliteration of Surah which will help you to understand how to read the Arabic text. Apart from that, we have included a Word-By-Word tamil Translation of the Arabic text of Surah .

Surah tamil Tafsir/Tafseer (Commentry)

In Surah we have included two Tafseer (Commentary) in tamil. The first one is from Mufti Ahmad Yaar Khan who was a well-known scholar. In this tafsir, we have also included the most popular Tafsir Ibn-Kathir which is the most comprehensive tafsir available in the world. You can read both or any one of your choice.

Sign up for Newsletter

×

📱 Download Our Quran App

For a faster and smoother experience,
install our mobile app now.

Download Now