بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱتَّقُواْ يَوۡمٗا تُرۡجَعُونَ فِيهِ إِلَى ٱللَّهِۖ ثُمَّ تُوَفَّىٰ كُلُّ نَفۡسٖ مَّا كَسَبَتۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ
இன்னும், ஒரு நாளை அஞ்சுங்கள். அதில் அல்லாஹ்வின் பக்கம் நீங்கள் திரும்ப கொண்டுவரப்படுவீர்கள். பிறகு, ஒவ்வொரு ஆன்மாவுக்கும் அது செய்தது(டைய கூலி) முழுமையாகக் கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا تَدَايَنتُم بِدَيۡنٍ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗى فَٱكۡتُبُوهُۚ وَلۡيَكۡتُب بَّيۡنَكُمۡ كَاتِبُۢ بِٱلۡعَدۡلِۚ وَلَا يَأۡبَ كَاتِبٌ أَن يَكۡتُبَ كَمَا عَلَّمَهُ ٱللَّهُۚ فَلۡيَكۡتُبۡ وَلۡيُمۡلِلِ ٱلَّذِي عَلَيۡهِ ٱلۡحَقُّ وَلۡيَتَّقِ ٱللَّهَ رَبَّهُۥ وَلَا يَبۡخَسۡ مِنۡهُ شَيۡـٔٗاۚ فَإِن كَانَ ٱلَّذِي عَلَيۡهِ ٱلۡحَقُّ سَفِيهًا أَوۡ ضَعِيفًا أَوۡ لَا يَسۡتَطِيعُ أَن يُمِلَّ هُوَ فَلۡيُمۡلِلۡ وَلِيُّهُۥ بِٱلۡعَدۡلِۚ وَٱسۡتَشۡهِدُواْ شَهِيدَيۡنِ مِن رِّجَالِكُمۡۖ فَإِن لَّمۡ يَكُونَا رَجُلَيۡنِ فَرَجُلٞ وَٱمۡرَأَتَانِ مِمَّن تَرۡضَوۡنَ مِنَ ٱلشُّهَدَآءِ أَن تَضِلَّ إِحۡدَىٰهُمَا فَتُذَكِّرَ إِحۡدَىٰهُمَا ٱلۡأُخۡرَىٰۚ وَلَا يَأۡبَ ٱلشُّهَدَآءُ إِذَا مَا دُعُواْۚ وَلَا تَسۡـَٔمُوٓاْ أَن تَكۡتُبُوهُ صَغِيرًا أَوۡ كَبِيرًا إِلَىٰٓ أَجَلِهِۦۚ ذَٰلِكُمۡ أَقۡسَطُ عِندَ ٱللَّهِ وَأَقۡوَمُ لِلشَّهَٰدَةِ وَأَدۡنَىٰٓ أَلَّا تَرۡتَابُوٓاْ إِلَّآ أَن تَكُونَ تِجَٰرَةً حَاضِرَةٗ تُدِيرُونَهَا بَيۡنَكُمۡ فَلَيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٌ أَلَّا تَكۡتُبُوهَاۗ وَأَشۡهِدُوٓاْ إِذَا تَبَايَعۡتُمۡۚ وَلَا يُضَآرَّ كَاتِبٞ وَلَا شَهِيدٞۚ وَإِن تَفۡعَلُواْ فَإِنَّهُۥ فُسُوقُۢ بِكُمۡۗ وَٱتَّقُواْ ٱللَّهَۖ وَيُعَلِّمُكُمُ ٱللَّهُۗ وَٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ
நம்பிக்கையாளர்களே! நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணை வரை (ஒருவர் மற்றவருடன்) கடனுக்கு வியாபாரம் செய்தால் அதை எழுதுங்கள். உங்களுக்கு மத்தியில் எழுதுபவர் நீதமாக எழுதவும். எழுதுபவர் - அல்லாஹ் அவருக்கு (எழுத்தறிவை) கற்பித்துள்ளதால் - எழுத மறுக்க வேண்டாம். ஆக, அவர் எழுதவும்; கடன் வாங்கியவர் வாசகம் கூறவும்; தம் இறைவனான அல்லாஹ்வை அஞ்சவும்; அதில் எதையும் குறைக்க வேண்டாம். ஆக, கடன் வாங்கியவர், விவரமற்றவராக அல்லது பலவீனராக அல்லது வாசகம் கூற இயலாதவராக இருந்தால், அவருடைய பொறுப்பாளர் நீதமாக வாசகம் கூறவும். இன்னும், உங்கள் ஆண்களில் இரு சாட்சிகளை சாட்சியாக்கத் தேடுங்கள். ஆக, இருவரும் ஆண்களாக இல்லையென்றால் ஓர் ஆண், இரு பெண்கள் (இருக்க வேண்டும்). ஏனெனில், அவ்விருவரில் ஒருத்தி மறந்தால் மற்றவள் அவளுக்கு நினைவூட்டுவாள். சாட்சிகளில் நீங்கள் திருப்தியடைபவர்களிலிருந்து (சாட்சிகளை அமையுங்கள்). இன்னும், சாட்சிகள் (சாட்சி கூற) அழைக்கப்படும் போது அவர்கள் மறுக்க வேண்டாம். (கடன்) சிறிதோ பெரிதோ அதன் தவணை வரை அதை எழுத சோம்பல் படாதீர்கள். இது அல்லாஹ்விடம் மிக நீதமானதாகவும், சாட்சியத்திற்கு அதிகம் உறுதியானதாகவும், (கடன் தொகை அல்லது தவணைப் பற்றி) நீங்கள் சந்தேகிக்காமல் இருக்க மிக நெருக்கமாகவும் இருக்கும். ஆனால், நீங்கள் உங்களுக்கிடையில் அதை ரொக்கமாக நடத்துகிற வியாபாரமாக இருந்தால் தவிர. ஆக, அதை நீங்கள் எழுதாமலிருப்பது உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் (கடனுக்கு) வியாபாரம் செய்தால் சாட்சி ஏற்படுத்துங்கள். இன்னும், எழுத்தாளரையும் சாட்சியையும் துன்புறுத்தக் கூடாது. நீங்கள் (துன்புறுத்தும் செயலைச்) செய்தால் நிச்சயமாக அது உங்களுக்குப் பெரும் பாவமாகும். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். (மார்க்க சட்டங்களை) அல்லாஹ் உங்களுக்குக் கற்பிப்பான். இன்னும், அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.
۞وَإِن كُنتُمۡ عَلَىٰ سَفَرٖ وَلَمۡ تَجِدُواْ كَاتِبٗا فَرِهَٰنٞ مَّقۡبُوضَةٞۖ فَإِنۡ أَمِنَ بَعۡضُكُم بَعۡضٗا فَلۡيُؤَدِّ ٱلَّذِي ٱؤۡتُمِنَ أَمَٰنَتَهُۥ وَلۡيَتَّقِ ٱللَّهَ رَبَّهُۥۗ وَلَا تَكۡتُمُواْ ٱلشَّهَٰدَةَۚ وَمَن يَكۡتُمۡهَا فَإِنَّهُۥٓ ءَاثِمٞ قَلۡبُهُۥۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ عَلِيمٞ
இன்னும், நீங்கள் பயணத்தில் இருந்து, (கடன் பத்திரம்) எழுதுபவரை நீங்கள் பெறாவிட்டால் (அதற்கு பகரமாக) அடமானங்களை கைப்பற்றி வைக்க வேண்டும். உங்களில் சிலர் சிலரை நம்பினால், நம்பப்பட்டவர், தம்மீது வைக்கப்பட்ட நம்பிக்கையை சரியாக நிறைவேற்றவும்! இன்னும் தமது இறைவனான அல்லாஹ்வை அவர் அஞ்சவும்! இன்னும், நீங்கள் சாட்சியத்தை மறைக்காதீர்கள்! யார் அதை மறைப்பாரோ நிச்சயமாக அவருடைய உள்ளம் பாவியாகிவிடும். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான்.
لِّلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ وَإِن تُبۡدُواْ مَا فِيٓ أَنفُسِكُمۡ أَوۡ تُخۡفُوهُ يُحَاسِبۡكُم بِهِ ٱللَّهُۖ فَيَغۡفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியவை ஆகும்! இன்னும், நீங்கள் உங்கள் உள்ளங்களில் உள்ளதை வெளிப்படுத்தினாலும் அல்லது அதை மறைத்தாலும் அதற்காக அல்லாஹ் உங்களுக்கு (கணக்கிட்டுக்) கூலி கொடுப்பான். ஆக, அவன் நாடுகிறவரை மன்னிப்பான்; அவன் நாடுகிறவரை தண்டிப்பான். அல்லாஹ் ஒவ்வொரு பொருள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
ءَامَنَ ٱلرَّسُولُ بِمَآ أُنزِلَ إِلَيۡهِ مِن رَّبِّهِۦ وَٱلۡمُؤۡمِنُونَۚ كُلٌّ ءَامَنَ بِٱللَّهِ وَمَلَـٰٓئِكَتِهِۦ وَكُتُبِهِۦ وَرُسُلِهِۦ لَا نُفَرِّقُ بَيۡنَ أَحَدٖ مِّن رُّسُلِهِۦۚ وَقَالُواْ سَمِعۡنَا وَأَطَعۡنَاۖ غُفۡرَانَكَ رَبَّنَا وَإِلَيۡكَ ٱلۡمَصِيرُ
தூதரும் நம்பிக்கையாளர்களும் தமது இறைவனிடமிருந்து தமக்கு இறக்கப்பட்டதை நம்பிக்கை கொண்டார்கள். (அவர்கள்) எல்லோரும் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொண்டார்கள். இன்னும், அவர்கள் கூறினார்கள்: “அவனுடைய தூதர்களில் யார் ஒருவருக்கு மத்தியிலும் பிரிவினை காட்டமாட்டோம். இன்னும், நாங்கள் செவியுற்றோம்; கட்டுப்பட்டோம். எங்கள் இறைவா! நாங்கள் உன் மன்னிப்பை வேண்டுகிறோம். உன் பக்கமே (எங்கள்) மீளுமிடம் இருக்கிறது.”
لَا يُكَلِّفُ ٱللَّهُ نَفۡسًا إِلَّا وُسۡعَهَاۚ لَهَا مَا كَسَبَتۡ وَعَلَيۡهَا مَا ٱكۡتَسَبَتۡۗ رَبَّنَا لَا تُؤَاخِذۡنَآ إِن نَّسِينَآ أَوۡ أَخۡطَأۡنَاۚ رَبَّنَا وَلَا تَحۡمِلۡ عَلَيۡنَآ إِصۡرٗا كَمَا حَمَلۡتَهُۥ عَلَى ٱلَّذِينَ مِن قَبۡلِنَاۚ رَبَّنَا وَلَا تُحَمِّلۡنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِۦۖ وَٱعۡفُ عَنَّا وَٱغۡفِرۡ لَنَا وَٱرۡحَمۡنَآۚ أَنتَ مَوۡلَىٰنَا فَٱنصُرۡنَا عَلَى ٱلۡقَوۡمِ ٱلۡكَٰفِرِينَ
அல்லாஹ், ஓர் ஆன்மாவை அதன் வசதிக்கு மேல் (-சக்திக்கு மேல்) சிரமப்படுத்த மாட்டான். அது செய்த நல்லது அதற்கே நன்மையாக இருக்கும். இன்னும், அது செய்த கெட்டது அதற்கே பாதகமாக இருக்கும். எங்கள் இறைவா! நாங்கள் மறந்தால் அல்லது தவறிழைத்தால் எங்களைத் தண்டிக்காதே! எங்கள் இறைவா! இன்னும், எங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது நீ அதைச் சுமத்தியது போன்று எங்கள் மீது கடினமான (ஒப்பந்த) சுமையைச் சுமத்தாதே! எங்கள் இறைவா! இன்னும், எங்களுக்கு அறவே ஆற்றல் இல்லாததை எங்களைச் சுமக்க வைக்காதே! இன்னும், எங்களை (பாவங்களை) முற்றிலும் மன்னிப்பாயாக! இன்னும், எங்களுக்கு (எங்கள் குற்றங்களை மறைத்து எங்களை) மன்னித்து விடுவாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீதான் எங்கள் மவ்லா (தலைவன், பொறுப்பாளன், உரிமையாளன், நிர்வகிப்பவன், எஜமானன், பரிபாலிப்பவன், ஆதரவாளன், அரசன்) ஆவாய்! ஆகவே நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!