بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَإِذۡ وَٰعَدۡنَا مُوسَىٰٓ أَرۡبَعِينَ لَيۡلَةٗ ثُمَّ ٱتَّخَذۡتُمُ ٱلۡعِجۡلَ مِنۢ بَعۡدِهِۦ وَأَنتُمۡ ظَٰلِمُونَ
இன்னும், மூஸாவிற்கு நாம் நாற்பது இரவுகளை வாக்களித்த சமயத்தை நினைவு கூருங்கள். பிறகு, நீங்களோ அநியாயக்காரர்களாக ஆகிவிட்ட நிலையில் - நீங்கள் ஒரு காளைக்கன்றை அவருக்குப் பின்னர் (தெய்வமாக) எடுத்துக் கொண்டீர்கள்.
ثُمَّ عَفَوۡنَا عَنكُم مِّنۢ بَعۡدِ ذَٰلِكَ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ
பிறகு, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அதன் பின்னர் உங்களை நாம் மன்னித்தோம்.
وَإِذۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ وَٱلۡفُرۡقَانَ لَعَلَّكُمۡ تَهۡتَدُونَ
இன்னும், நீங்கள் நேர்வழி பெறுவதற்காக மூஸாவிற்கு வேதத்தையும், பிரித்தறிவிக்கக்கூடிய சட்டத்தையும் நாம் கொடுத்ததை நினைவு கூருங்கள்.
وَإِذۡ قَالَ مُوسَىٰ لِقَوۡمِهِۦ يَٰقَوۡمِ إِنَّكُمۡ ظَلَمۡتُمۡ أَنفُسَكُم بِٱتِّخَاذِكُمُ ٱلۡعِجۡلَ فَتُوبُوٓاْ إِلَىٰ بَارِئِكُمۡ فَٱقۡتُلُوٓاْ أَنفُسَكُمۡ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ عِندَ بَارِئِكُمۡ فَتَابَ عَلَيۡكُمۡۚ إِنَّهُۥ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ
இன்னும், மூஸா தன் சமுதாயத்திற்கு, “என் சமுதாயமே! நீங்கள் காளைக்கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டதால் நிச்சயமாக நீங்கள் உங்கள் ஆன்மாக்களுக்கு தீங்கு செய்தீர்கள். எனவே, (பாவத்தை விட்டு விலகி) மன்னிப்புக் கோரி உங்களைப் படைத்தவனின் பக்கம் திரும்புங்கள். இன்னும், உங்க(ளில் காளைக் கன்றை வணங்கியவர்க)ளுடைய உயிர்களைக் கொல்லுங்கள். அது, உங்களைப் படைத்தவனிடம் உங்களுக்குச் சிறந்ததாகும்” என்று கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். ஆகவே, (நீங்கள் உங்களில் காளைக் கன்றை வணங்கியவர்களைக் கொன்றவுடன் அல்லாஹ்) உங்களை மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் தவ்பாவை (-பாவ மன்னிப்புத் தேடியவரின் பிரார்த்தனையை) அதிகம் அங்கீகரிப்பவன், மகா கருணையாளன்.
وَإِذۡ قُلۡتُمۡ يَٰمُوسَىٰ لَن نُّؤۡمِنَ لَكَ حَتَّىٰ نَرَى ٱللَّهَ جَهۡرَةٗ فَأَخَذَتۡكُمُ ٱلصَّـٰعِقَةُ وَأَنتُمۡ تَنظُرُونَ
இன்னும் மூஸாவே! “அல்லாஹ்வை நாம் கண்கூடாக காணும் வரை உம்மை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்” என்று நீங்கள் கூறியதை நினைவு கூருங்கள். ஆக, நீங்கள் பார்க்கின்ற நிலையில் பெரும் சப்தம் உங்களைப் பிடித்தது. (நீங்கள் இறந்து விட்டீர்கள்.)
ثُمَّ بَعَثۡنَٰكُم مِّنۢ بَعۡدِ مَوۡتِكُمۡ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ
பிறகு, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்கள் மரணத்திற்குப் பின்னர் உங்களை (உயிர்ப்பித்து) நாம் எழுப்பினோம்.
وَظَلَّلۡنَا عَلَيۡكُمُ ٱلۡغَمَامَ وَأَنزَلۡنَا عَلَيۡكُمُ ٱلۡمَنَّ وَٱلسَّلۡوَىٰۖ كُلُواْ مِن طَيِّبَٰتِ مَا رَزَقۡنَٰكُمۡۚ وَمَا ظَلَمُونَا وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ
இன்னும், உங்கள் மீது மேகத்தை நிழலிடும்படிச் செய்தோம். இன்னும், மன்னு ஸல்வா (உண)வை உங்களுக்கு இறக்கி கொடுத்தோம். நாம் உங்களுக்கு வழங்கிய நல்லவற்றிலிருந்து நீங்கள் புசியுங்கள். அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை. எனினும், (அவர்கள்) தங்களுக்குத் தாமே தீங்கிழைப்பவர்களாக இருந்தனர்.
وَإِذۡ قُلۡنَا ٱدۡخُلُواْ هَٰذِهِ ٱلۡقَرۡيَةَ فَكُلُواْ مِنۡهَا حَيۡثُ شِئۡتُمۡ رَغَدٗا وَٱدۡخُلُواْ ٱلۡبَابَ سُجَّدٗا وَقُولُواْ حِطَّةٞ نَّغۡفِرۡ لَكُمۡ خَطَٰيَٰكُمۡۚ وَسَنَزِيدُ ٱلۡمُحۡسِنِينَ
இன்னும் நாம் (உங்களுக்கு) கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்: நீங்கள் இந்த ஊரில் நுழையுங்கள்! ஆக, அதில் நீங்கள் நாடிய விதத்தில் தாராளமாகப் புசியுங்கள்! (அதன்) வாசலில் தலை குனிந்தவர்களாக நுழையுங்கள்! இன்னும், (எங்கள்) பாவச்சுமை நீங்கட்டும் எனக் கூறுங்கள்! (அப்படி நீங்கள் செய்தால்) உங்கள் குற்றங்களை உங்களுக்கு மன்னிப்போம். இன்னும், நல்லறம் புரிவோருக்கு (நன்மையை மேலும்) அதிகப்படுத்துவோம்.
فَبَدَّلَ ٱلَّذِينَ ظَلَمُواْ قَوۡلًا غَيۡرَ ٱلَّذِي قِيلَ لَهُمۡ فَأَنزَلۡنَا عَلَى ٱلَّذِينَ ظَلَمُواْ رِجۡزٗا مِّنَ ٱلسَّمَآءِ بِمَا كَانُواْ يَفۡسُقُونَ
ஆக, (அந்த) அநியாயக்காரர்கள் தங்களுக்கு எது கூறப்பட்டதோ அதை வேறு வார்த்தையாக மாற்றி(க் கூறி)னார்கள். எனவே, அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளையை) மீறுபவர்களாக இருந்த காரணத்தால் (அந்த) அநியாயக்காரர்கள் மீது வானத்திலிருந்து நாம் தண்டனையை இறக்கினோம்.
۞وَإِذِ ٱسۡتَسۡقَىٰ مُوسَىٰ لِقَوۡمِهِۦ فَقُلۡنَا ٱضۡرِب بِّعَصَاكَ ٱلۡحَجَرَۖ فَٱنفَجَرَتۡ مِنۡهُ ٱثۡنَتَا عَشۡرَةَ عَيۡنٗاۖ قَدۡ عَلِمَ كُلُّ أُنَاسٖ مَّشۡرَبَهُمۡۖ كُلُواْ وَٱشۡرَبُواْ مِن رِّزۡقِ ٱللَّهِ وَلَا تَعۡثَوۡاْ فِي ٱلۡأَرۡضِ مُفۡسِدِينَ
இன்னும், மூஸா தனது சமுதாயத்திற்குத் தண்ணீர் தேடிய சமயத்தை நினைவு கூருங்கள். “நீர் உம் தடியால் கல்லை அடிப்பீராக!” எனக் கூறினோம். அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன. மக்கள் எல்லாம் தங்களது நீர் அருந்தும் பகுதியை திட்டமாக அறிந்தார்கள். அல்லாஹ் கொடுத்த உணவிலிருந்து புசியுங்கள்! பருகுங்கள். இன்னும், (பூமியில்) விஷமம் (கலகம், குழப்பம், பாவம்) செய்தவர்களாக இருந்த நிலையில் பூமியில் எல்லை மீறி விஷமம் செய்யாதீர்கள்.